
கோவையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவமனையின் கேண்டீனுக்கு கொண்டுவரப்படும் உணவு ஆம்புலன்ஸ் மூலமாக கொண்டு வரப்படும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கோவை சிங்காநல்லூர் பகுதியில் செயல்பட்டு வரும் என்.ஜி மருத்துவமனையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அவசர தேவைக்காகவும், விபத்தில் சிக்கியவர்களை மீட்கவும், ஒரு மருத்துவமனையில் இருந்து மற்றொரு மருத்துவமனைக்கு நோயாளிகளை மேல் சிகிச்சையாக கொண்டு செல்லவும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சில நேரங்களில் இப்படி மீட்கப்படுபவர்கள் ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே உயிரிழந்தும் விடுகின்றனர். இந்த நிலையில் என்.ஜி எனும் அந்த தனியார் மருத்துவமனையின் கேண்டீனில் பயன்படுத்தக்கூடிய பப்ஸ் உள்ளிட்ட உணவுப் பொருட்களை ஆம்புலன்ஸ் வாகனத்தில் வைத்து எடுத்து வந்து அதனை கேண்டீனுக்கு எடுத்து செல்லும் வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. சுகாதாரத்துறை இதுபோன்ற செயலில் ஈடுபடும் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் இணையத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)