Ambulance carrying the student's body in an accident!

Advertisment

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் மரணமடைந்த மாணவியின் உடலுக்குகள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் இரண்டாம் பிரதப் பரிசோதனை முடிந்தைத் தொடர்ந்து, உயர் நீதிமன்ற உத்தரவின்படி மாணவியின் பெற்றோர் இன்று காலை உடலைப் பெற்றுக்கொண்டனர். அதன்பின் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கள்ளக்குறிச்சி மருத்துவமனையிலிருந்து, மாணவியின் சொந்த கிராமமான கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே உள்ள பெரியநெசலூர் கிராமத்திற்கு மாணவியின் உடல் ஆம்புலன்ஸில் கொண்டு செல்லப்பட்டது.

இந்நிலையில், கள்ளக்குறிச்சி - கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் உளூந்தூர்பேட்டை அருகே ஆம்புலன்ஸ் சென்றுகொண்டிருந்தபோது திடீரென விபத்துக்குள்ளானது.

மாணவியின் உடலை எடுத்துச் சென்ற ஆம்புலன்ஸ், நெடுஞ்சாலையில் முன்னே சென்ற வாகனத்தின் மீது லேசாக மோதி சிறிய விபத்துக்குள்ளானது.உடனடியாக பாதுகாப்புக்கு வந்த காவல்துறையினர் விபத்துக்குள்ளான ஆம்புலன்ஸை மீட்டு, மீண்டும் மாணவியின் சொந்த கிராமத்தை நோக்கி செல்ல வழி செய்தனர்.