Advertisment

அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் எரிந்து நாசம்

 Ambulance burnt down in government hospital

Advertisment

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே மருத்துவமனையின் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் திடீரென தீப்பற்றி எரிந்து தீக்கிரையான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மரக்காணம் அருகே உள்ள பிரம்மதேசம் அரசு மருத்துவமனை அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் திடீரென இரவு நேரத்தில் தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக அப்பகுதி மக்கள் தீயை அணைக்கமுயன்றனர். இருப்பினும் ஆம்புலன்ஸானது முழுமையாக எரிந்து சேதம் அடைந்தது. நேற்றுதான் அந்த ஆம்புலன்ஸ் சர்வீஸ் முடிந்து மருத்துவமனை சேவைக்காக கொண்டு வரப்பட்டிருந்த நிலையில், அன்று இரவே தீப்பற்றி எரிந்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

marakkanam villupuram
இதையும் படியுங்கள்
Subscribe