Advertisment

ஆம்புலன்ஸ் - பைக் மோதலில் இருவர் உயிரிழப்பு! 

Ambulance-bike collision  two passed away

Advertisment

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகில் உள்ள ஒதியத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பூங்காவனம். இவரது மகன் ஹரி(24), மற்றும் அதே ஊரைச் சேர்ந்த கலியமூர்த்தி என்பவரது மகன் ஜெகன்(20). நண்பர்களான இவர்கள் இருவரும் தங்கள் உறவினர் ஊரான கடத்தூர் சென்றுவிட்டு மீண்டும் தங்கள் ஊருக்குத் இருசக்கர வாகனத்தில் திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

விழுப்புரம்- திருவண்ணாமலை நெடுஞ்சாலையில் அவர்கள் கிராமம் எல்லைப் பகுதியில் வந்தபோது அவர்களுக்கு முன்னால் சென்றுகொண்டிருந்த வேன் ஒன்றை முந்திச் செல்ல முயன்றுள்ளனர். அப்போது எதிரே ஆம்புலன்ஸ் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது.

இவர்கள் வந்த வாகனம் கட்டுப்பாடு இல்லாமல் எதிரில் வந்த ஆம்புலன்ஸ் வாகனத்தில் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் பைக்கில் சென்ற ஹரியும் ஜெகனும் பலத்த காயமடைந்தனர். ஆம்புலன்சில் இருந்தவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. விபத்து நடந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் படுகாயமடைந்த 2 வாலிபர்களையும் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ஜெகன் உயிரிழந்துள்ளார். மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட ஹரி சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். இதுகுறித்து கண்டாச்சிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Viluppuram
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe