Advertisment

ஆம்புலன்சும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து... நால்வர் படுகாயம்!

Ambulance and truck collide head-on ... Four injured!

திருச்சி அருகே ஆம்புலன்ஸ்ம் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் பிறந்து 16 நாட்களே ஆன குழந்தை உட்பட 4 பேர் படுகாயமடைந்தனர்.

Advertisment

திருச்சி லால்குடி அருகே உள்ள அகிலாண்டபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவரது மனைவி கவிதா. பிறந்து 16 நாட்களே ஆன இவர்களது ஆண் குழந்தைக்கு இயற்கை உபாதை காரணமாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்சில் திருச்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். குழந்தை மற்றும் தாயை ஏற்றிக்கொண்டு சென்ற ஆம்புலன்ஸ் முத்தமிழ் நகர் என்னுமிடத்தில் முன்னே சென்ற பேருந்தை முந்திச் செல்ல முயன்ற போது எதிரே வந்த லாரி பலமாக நேருக்கு நேர் மோதியது. இதில் ஆம்புலன்சின்முகப்பு பக்கம் நொறுங்கி சேதமானது. இந்த விபத்து காரணமாக சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பிறந்து 16 நாட்களே ஆன குழந்தை, தாய் கவிதா, ஆம்புலன்ஸ் ஓட்டுநர் உட்பட 4 பேர் படுகாயமடைந்தனர். அருகிலிருந்த ஊர் மக்கள் மோதி கொண்ட இரண்டு வாகனங்களையும் தனித்தனியாகக் கயிறு கட்டி இழுத்து விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தவர்களை மீட்டனர். நான்கு பேரும் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், நால்வருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Advertisment

accident lorry
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe