am

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த பெண்ணாடம் அம்பிகா சர்க்கரை ஆலையில், கடந்த 2017-18 ஆம் ஆண்டுக்கான கரும்பு அறுவை தொகை பாக்கியை, கடந்த 13 மாதங்களாக விவசாயிகளுக்கு தரவில்லை. மேலும் வட்டி தொகையையும் ஆலை நிர்வாகம் இதுவரை வழங்கவில்லை.

Advertisment

இது குறித்து பல முறை போராட்டங்கள் நடத்தியும், பேச்சுவார்த்தையில் ஈடுபட்டும் எவ்வித பயனும் இல்லாததால் கரும்பு விவசாயிகள் 50-க்கும் மேற்பட்டோர் ஆலை நிறுவனத்தின் பொது மேலாளர் சந்திக்க வேண்டும் என்று கூறி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

Advertisment

பின்னர் துணை பொது மேலாளர் பேச்சுவார்த்தையில் நடத்தி சமரசத்தில் ஈடுப்பட்டனர். ஆனால் கரும்பு விவசாயிகள் வருகின்ற 19 ஆம் தேதி சென்னையில் உள்ள ஆலை நிர்வாகத்தினை முற்றுகையிடப்போவதாக அறிவித்துள்ளனர். மேலும் தங்களுக்கு மத்திய மாநில அரசுகள் மற்றும் ஆலை நிர்வாகம் கரும்பு நிலுவைத்தொகை பாக்கியை வழங்காவிட்டால் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டுமொத்தமாக விவசாயிகள் புறக்கணிப்போம் என்று எச்சரிக்கை விடுத்தனர்.