Skip to main content

அம்பேத்கர் நினைவு தினத்தன்று சமூக நல்லிணக்கப் பேரணி!

Published on 07/12/2019 | Edited on 07/12/2019

தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் ஒன்றியத்திற்கு உட்பட்ட பந்தநல்லூர் கடைவீதியில்  அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளான இன்று அனைத்து சமூக மக்களும், வர்த்தகர்களும், அரசியல் பிரமுகர்களும் ஒன்றிணைந்து பேருந்து நிலையத்திலிருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் பேரணியாக சென்று கடைவீதியில் அமைக்கப்பட்டிருந்த அம்பேத்கரின் திருவுருவபடத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய விதம் அனைத்து சமூக மக்களையும் வெகுவாக கவர்ந்தது.

 

 Ambedkar Memorial Day-Rally



இந்தியாவில் பல இடங்களில் சாதிய, மத மோதல்கள் வெடித்து வந்தாலும், எங்கள் பகுதியில் பெயரலவில் சாதி இருக்கலாம் அதை சாதகமாக்கிக்கொண்டதில்லை, அம்பேத்கரின் கொள்கை, அவர் வகுத்துதந்த சட்டம் அனைத்தும் பொதுவானதே என்று முழக்கமிட்டபடியே அவரது நினைவு தினத்தை போற்றும் விதமாக அமைதியான முறையில் பேரணியாகவந்து, மாலை அணிவித்து மறியாதை செலுத்தியுள்ளனர்.

பேரணியை வி.சி.க திருப்பனந்தாள் ஓன்றிய கழக செயலாளர் முருகப்பன் ஒருங்கிணைத்தார். இதில் பாமகவின் மாநில விவசாய அணி தலைவர் கோ.ஆலயமணி, திமுக திருப்பனந்தாள் ஒ.செ ரவிச்சந்திரன், பா.ஜ.கவின் ஒ.செ ராதா, பாமக மாவட்ட தலைவர் திருஞாணம், வி.சி.க ஒ.செ முருகப்பன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஒ.செ. பொன்.த.மனோகரன், காங்கிரஸ் கட்சியின் ஓன்றிய பொறுப்பாளர்களில் ஒருவரான சபில் ரகுமான், அதிமுக பொறுப்பாளரான சுகுமார் உள்ளிட்ட பல அரசியல்கட்சியினரும், அனைத்து சமுகத்தேச்சேர்ந்தவர்களும் கலந்துகொண்டு."எங்கள் ஊரில் சாதி இல்லை மதம் இல்லை புரட்சியாளரின் கொள்கை ஒன்றே"என்கிற முழக்கத்தோடு பேரணியாக வந்தது பலரையும் நெகிழசெய்துள்ளது.

இதுகுறித்து பா.ம.க மாநில விவசாய அணி செயலாளர் ஆலயமணியும், திமுக ஓ.செ ரவிச்சந்திரனும் கூறுகையில்," உலகத்தலைவர்களில் முதன்மையானவர் டாக்டர் அம்பேத்கர் அவர்கள், அவர் ஓரு சமுகத்தினருக்கோ, ஒரு கட்சியினருக்கோ சொந்தமானவர் இல்லை, அவர் பொதுவானவர், நமது அரசியல் சாசனத்தின் தந்தை, கல்வியாளர்களின் கருத்துப்பெட்டகம்,  அவரது நினைவுதினத்தை, பிறந்த தினத்தை ஒவ்வொரு இந்திய குடிமகனும் கொண்டாடி பெருமிதம் கொள்ளவேண்டும். எங்களிடமும் சாதி இருக்கு, அது வீட்டோடு முடிந்துவிடும் வீதிக்கு கொண்டுவருவதில்லை, தமிழகத்தில் எத்தனையோ ஊர்களில் சாதிய மோதல் நடந்துள்ளது. ஆனால் எங்கள் பகுதியில் அதற்கு இடம்கொடுக்கவில்லை, இனியும் கொடுக்கமாட்டோம் என்பதை பறைசாற்றும் விதமாகவே அம்பேத்கர் நினைவுதினத்தில் சமுக நல்லிணக்க பேரணியை நடத்தி சக மக்களுக்கு பதிவித்துள்ளோம்." என்கிறார்கள். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு; ஒருவர் பலியான சோகம்!

Published on 15/02/2024 | Edited on 15/02/2024
US Kansas City Super Bowl parade incident

அமெரிக்காவில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியான சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் கன்சாஸ் நகரில் சீஃப்ஸ் சூப்பர் பவுல் என்னும் ரக்பி விளையாட்டு போட்டியின் வெற்றியை கொண்டாடும் விதமாக லட்சக்கணக்கான ரக்பி ரசிகர்கள் பேரணியாக சென்று கொண்டிருந்துள்ளனர். அப்போது இந்த பேரணியில் கலந்து கொண்ட ரக்பி ரசிகர்கள் மீது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் திடீரென சூப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் 21 பேர் காயமடைந்துள்ளனர். பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில்  3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ரக்பி விளையாட்டு போட்டியின் வெற்றியை கொண்டாடும் விதமாக பேரணி சென்றவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது அமெரிக்காவில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பிரம்மாண்ட பேரணி-1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

Published on 11/01/2024 | Edited on 11/01/2024
Over 1000 people participate in a grand rally to condole the demise of Vijayakanth

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு இரங்கல் செலுத்தும் வகையில் அனைத்து கட்சி சார்பில் பேரணி மற்றும் இரங்கல் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு தேமுதிக வடக்கு மாவட்ட கழக செயலாளரும், பண்ருட்டி முன்னாள் எம்எல்ஏவுமான சிவக்கொழுந்து தலைமை தாங்கினார். மாவட்ட அவைத் தலைவர் ராஜாராம், தெற்கு மாவட்டச் செயலாளர் உமாநாத், மாவட்ட அவைத் தலைவர் பாலு உள்ளிட்ட தேமுதிகவினர். அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத், திமுக பண்ருட்டி நகர் மன்ற தலைவர் ராஜேந்திரன், திமுக மாவட்ட துணை செயலாளர் தணிகை தம்பி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் உத்திராபதி, மாவட்ட குழு உறுப்பினர் கிருஷ்ணன், அதிமுக முன்னாள் எம்எல்ஏ சுப்பிரமணியன், அதிமுக மாவட்டச் செயலாளர் சுந்தரமூர்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட நிர்வாகி சேகர் உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு அவரது படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

NN

இதில் கலந்து கொண்டவர்கள் விஜயகாந்த்  வாழும்போது மக்கள் மத்தியில் எவ்வாறு நடந்து கொண்டார். பொதுமக்களின் பல்வேறு குறைபாடு குறித்து அவர் செய்த உதவிகள், திரைப்படத்துறை மற்றும் அரசியல் வாழ்க்கையில் அவர் எவ்வாறு நாணயமாக நடந்து கொண்டார் என்பது குறித்து பேசினார்கள். இதில் அவர் அன்னதானத்தை முழுமூச்சாக செய்தது அனைத்து மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அவர் இறந்தும் அவரது புகழ் மறையாமல் இருப்பதற்கு வாழும் காலத்தில் நடந்து கொண்டவிதம் என்று குறிப்பிட்டனர்.

முன்னதாக பண்ருட்டி வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே உள்ள எம்ஜிஆர் சிலையில் இருந்து 1000-த்திற்கும் மேற்பட்டோர் பேரணியாக இரங்கல் கூட்டம் நடைபெறும் திருமண மண்டபத்திற்கு சென்றனர். இது பண்ருட்டி பகுதியில் உள்ள வணிகர்கள் மற்றும் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது.