/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/surya soo (2).jpg)
தீபாவளி இரண்டு நாட்களுக்கு முன் நவம்பர் 12- ஆம் தேதி சூரரைப் போற்று திரைப்படம் ஓடிடியில் (அமேசான் ப்ரைமில்) வெளியாகும் என்று நடிகர் சூர்யா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இறுதிச்சுற்று படத்தின் இயக்குநர் சுதா கொங்கரா பிரசாத் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள திரைப்படம் சூரரைப் போற்று. இந்த படத்தில் தெலுங்கு நடிகர் மோகன் பாபு, நடிகை அபர்ணா பாலமுரளி, ஜாக்கி ஷெராப் உட்பட பலர் நடித்துள்ளனர்.
சூர்யாவின் 2 டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனமும், சிக்யா எண்டர்டெயின்மென்ட் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
அமேசான் ப்ரைமில் திரைப்படம் வெளியாகும் நிலையில் சூரரைப் போற்றின் ட்ரெய்லர் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
இந்திய விமானப்படையில் இருந்து தடையில்லா சான்றிதழ் பெற தாமதமானதால் அக்டோபர் 30- ஆம் தேதிக்கு பதில் நவம்பர் 12- ஆம் தேதி சூரரைப் போற்று திரைப்படம் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow Us