உண்மையிலேயே நான் வந்து விஸ்வரூபம் எடுத்தாநீங்க அழிஞ்சு போவீங்க நீ உட்பட அழிஞ்சு போவ, உங்க டிடிவி தினகரன் கிட்ட சொல்லிடு இந்த மாதிரி அரசியல் பண்ண வேணாம் நீ தோற்றுப் போவ என்னைக்கும் ஜெயிக்க மாட்டனு என காட்டமாக டிடிவி.தினகரன் பற்றி தங்கத்தமிழ்செல்வன் பேசிய ஆடியோ வெளியாகிய நிலையில்,

Advertisment

ttv dinakaran interview about thangatamilselvan audio issue

அந்த ஆடியோவுக்கு தலைமை சரியில்லைநெல்லையிலும், கோயம்புத்தூரிலும் மண்டல பொறுப்பாளர்களால்கட்சி அழிந்துவிட்டது. இதை எடுத்துச்சொன்னால் நேரில் கண்டிக்காமல் சமூக வலைதளத்தில் அவதூறு பரப்படுகிறார்கள். என் மீது தவறென்றால் கட்சியை விட்டு நீக்குங்கள் என விளக்கமளித்துள்ளார் தமிழ்செல்வன்.

இந்த ஆடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்இன்று காலை தேனி மாவட்ட நிர்வாகிகளோடு தனது இல்லத்தில் டிடிவி தினகரன் தலைமையில்ஆலோசனை நடந்தது. அதன்பின்பின் செய்தியாளர்களை சந்தித்த டிவிவி தினகரன்

Advertisment

ttv dinakaran interview about thangatamilselvan audio issue

கடந்த வாரத்தில் தங்கத்தமிழ்செல்வன் ஒரு ரேடியோவில் நேர்காணல் கொடுத்தது பற்றி நிர்வாகிகள் சிலர் அதிருப்தி தெரிவித்திருந்தனர்.அதனால் அவரை 20 ஆம் தேதி வர சொல்லியிருந்தேன்.ஏன் இப்படி வாய்க்கு வந்தபடி பேசுகிறீர்கள் என கேட்டேன். நான் அப்படி பேசவில்லை இப்படி பேசவில்லை என சொன்னார். அவங்க கேள்வி அப்படி தப்பா கேட்டாங்க என்றார், நான் அதற்கு நீங்க ஏன் போய் அப்படி மாட்டிக்கொள்கிறீர்கள். தெரிஞ்சா சொல்லணும் தெரியாம ஏன் கேட்கிற கேள்விக்கு ஒத்துக்கொள்கிறீர்கள் என்று சொன்னேன்.இனி டிவிக்கெல்லாம் பேட்டி கொடுத்தால் ஒழுங்கா கொடுக்குங்க இல்லையென்றால் கொள்கைப்பரப்பு செயலாளர், மாவட்ட செயலாளர் பதவிக்கு வேறு ஆளை போடவேண்டிய நிலைமை வந்துவிடும் என்றேன், யாரையும் நீக்க அச்சமோ பாயமோ எனக்கு கிடையாது.அவர் என்னை பார்த்தால் விஷ்வரூபம் எல்லாம் எடுக்கமாட்டார் பெட்டிப் பாம்பாய் அடங்குவார். அந்த ஆடியோவில் பேசியவர் என் உதவியாளர் அல்ல கட்சியின் நிர்வாகி செல்லப்பாண்டியன் மதுரையை சேர்ந்தவர். அவர் முடிவெடுத்துவிட்டு பேசுகிறார், உண்மையாக தூங்குபவரை எழுப்பலாம் தூங்குற மாதிரி நடிப்பவரை எப்படி எழுப்ப முடியும்.அவர் பேச்சுக்கெல்லாம் மதிப்பு கொடுத்து நேரத்தை வேஸ்ட் செய்யாதீங்க. அவர் வாய்க்கு வந்ததை பேசிக்கொண்டிருப்பார் நானும் ரொம்ப நாளா எச்சரித்தேன்.யாரோ அவர் இப்படி பேச இன்ஸ்ட்ரக்சன் கொடுக்குறாங்க தாக்கி பேசுங்க என்றுஅதைக்கேட்டு பேசிக்கொண்டிருக்கிறார்.இன்னும் கொஞ்ச நாளில் தெரிஞ்சுடும்என்றார்.