Advertisment

அந்த இரண்டு செருப்புகளுக்காகத்தான் காத்துக்கொண்டிருக்கிறேன்- கமல் பேச்சு

சென்னை வேளச்சேரியில் நடந்த திரைப்பட விழாவில் ஒன்றில் பேசிய மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும்,நடிகருமானகமல்ஹாசன் தன் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவத்தில் அவமானம் செருப்பு வீசியவருக்கே என தெரிவித்தார்.

Advertisment

 I am waiting for those two slippers - Kamal talk

மேலும் அவர் பேசுகையில்,

ஹேராம் படத்தில் காந்தியார்செருப்பை எடுத்துக்கொண்டு வருவேன். நான் அந்த படத்திற்காக ஆராய்ச்சி செய்தபோது காந்தியார் போட்டிருந்த கண்ணாடியும், செருப்பும் அந்த கலவரத்தில் காணாமல் போய்விட்டது என்ற குறிப்பு இருந்தது. எனவே நான் அந்த செருப்பை உருவாக்கிஇருந்தேன். சாகேத்ராம் அந்த செருப்பைகையில் எடுத்துக்கொள்கிறான். வாழ்நாள் முழுவதும் அதை நெஞ்சில் அணைத்துக்கொண்டு இறக்கிறான் என்பதை வைத்திருந்தேன்.

அந்த இரண்டு செருப்புகளுக்காகத்தான்காத்துக்கொண்டிருக்கிறேன். ஒன்று வந்து சேர்ந்து விட்டது. இதை பற்றி பேசாமல் இருக்கமாட்டார்கள் எனத்தெரியும் ஆனால் பயந்து பயந்து பேசுகிறார்கள். இதில் எனக்கு எந்த அவமானமும் இல்லை போட்ட அவருக்குத்தான் அவமானம்எனக்கூறினார்.

Gandhi kamalhaasan Makkal needhi maiam
இதையும் படியுங்கள்
Subscribe