திண்டுக்கல் மாவட்டம்வத்தலக்குண்டு அருகே பட்டிவீரன்பட்டி ந.சு.வி.வி தொடக்கப்பள்ளியில் 1987 ஆம்ஆண்டு முதல் 1992 ம் ஆண்டு வரை அப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி 30 வருடங்களுக்கு பிறகு அதே பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

Advertisment

Alumni honored the Teachers.. A Flexible Meeting After 30 Years !!

இப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் பிசியோதெரபி டாக்டர் சிவராஜா தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் சென்னை, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், வத்தலக்குண்டு, கொடைக்கானல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்தனர். அனைவரும் ஒன்று சேர்ந்து மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்ளும் இந்த நாளில் தங்களுக்கு முதன் முதலில் 'அ' கற்றுத்தந்த ஆசிரியர்கள் அனைவரையும் வரவழைத்து அவர்களை கௌரவப்படுத்த வேண்டும் என்று முடிவெடுத்தனர்.

முன்னாள் மாணவர்களின் அழைப்பினை ஏற்று அப்போது பணிபுரிந்த 15 ஆசிரியர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இதில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்தார் 85 வயதை கடந்த திலகவதி இந்நிகழ்ச்சியில் பங்கேற்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். ஆசிரியர்கள் அனைவரையும் விழா மேடையில் அமரவைத்து அவர்களுக்கு பொன்னாடை போர்த்தியும், மாலை அணிவித்தும் பரிசுப்பொருட்கள் உள்ளிட்ட வழங்கி அவர்களை கௌரவப்படுத்தினர்.

Advertisment

Alumni honored the Teachers.. A Flexible Meeting After 30 Years !!

முன்னாள் மாணவர்களும், முன்னாள் ஆசிரியர்களும் பழைய நினைவுகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டனர். முன்னாள் மாணவர்கள் சார்பில் தங்கள் படித்த பள்ளிக்கு 2 மின் விசிறிகள் வழங்கப்பட்டது. தங்களை நினைவில் வைத்து கௌரவப்படுத்தியது பெரும் மகிழ்ச்சி அளித்ததாக ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் கூறினர்.

முன்னாள் மாணவர்கள் விஜயசுந்தர், நல்லதம்பி, ராஜேந்திரன், பிரபாகரன் உள்ளிட்டோர் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு பணிகளை செய்து இருந்தனர்.