பெத்தேல் நகர் ஆக்கிரமிப்பு விவகாரம்; நீதிமன்றத்தில் உறுதி செய்த அரசு

பரக

சென்னையை அடுத்த பெத்தேல் நகர் பகுதியில் உள்ள குடியிருப்புகள் மற்றும் கடைகளைஅகற்ற உயர்நீதிமன்றம் சில வாரங்களுக்கு முன்பு உத்தரவிட்டது. இதனை எதிர்த்தும், சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை திரும்பப் பெறக்கோரியும் பெத்தேல் நகர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு கிட்டத்தட்ட 4,000 குடியிருப்புகளில் 30,000-க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில், பெத்தேல் நகரில் ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்கும் உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனசென்னை உயர்நீதிமன்றத்தில் பலர் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு இன்று விசாரணை வந்தபோதுஅரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பெத்தேல் நகர் மக்களுக்கு தமிழக அரசு மாற்று இடம் நிச்சயம் வழங்கும் என்று தெரிவித்துள்ளார். இதனால் இந்த வழக்கில் நீதிமன்றம் விரைவில் உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Chennai highcourt
இதையும் படியுங்கள்
Subscribe