Advertisment

அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்த மாற்று ஏற்பாடு

Alternative arrangements to pay respects at Anna memorial

அண்ணா சதுக்கத்தில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளையொட்டி மரியாதை செலுத்திட மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Advertisment

இது குறித்து தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், “சென்னை, காமராஜர் சாலையில் அமைந்துள்ள அண்ணா சதுக்கத்தில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. எனவே நாளை (03.02.2024) நடைபெறவுள்ள பேரறிஞர் அண்ணாவின் 55வது நினைவு நாளை முன்னிட்டு, பேரறிஞர் அண்ணா மற்றும் எம்.ஜி.ஆரின் நினைவிடத்திற்கு இடையே அமைந்துள்ள பகுதியில் பேரறிஞர் அண்ணாவின் திருவுருவப்படம் வைக்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்த இடத்தில் பேரறிஞர் அண்ணாவிற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்திடுமாறு, அரசியல் கட்சியினர், அரசியல் தலைவர்கள், அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரிடம்கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chennai Marina
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe