
பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டு வரும் நிலையில், ஏற்கனவே நலிவடைந்த நிலையில்உள்ளபட்டாசுத் தொழிலாளர்களின் வாழ்வுக்கு மாற்று நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம் என மதுரை உயர் நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.
சிறு சிறு பட்டாசுத் தொழிற்சாலைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லை எனவும் அதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தொடுக்கப்பட்ட வழக்கில் நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது. மதுரை, சிவகாசி, விருதுநகர்பகுதியில் எத்தனை பட்டாசு நிறுவனங்கள் உள்ளது. எத்தனை ஊழியர்கள் வேலை செய்கின்றனர். எத்தனை விபத்துகள் நடந்து உள்ளது. எவ்வளவு பேருக்கு என்ன வகையான நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. பட்டாசுத் தொழிலாளர்களின் வாழ்வு ஏற்கனவே நலிவடைந்த நிலையில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு வழங்கும் வகையில் அரசு மாற்று நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
பல்வேறு மாநிலங்களில் பட்டாசு வெடிப்பதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.அதேபோல் நேரக் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுதொடர்பாகமத்திய,மாநில தொழில்துறைசெயலாளர்கள் பதிலளிக்க உத்தரவிட்டு, டிசம்பர் 4-ஆம்தேதி வழக்கை ஒத்திவைத்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)