Skip to main content

நேற்று முன்தினம் நாகை... நேற்று சென்னை... இன்று கன்னியாகுமரி - முதல்வருக்கு ஆளூர் ஷாநவாஸ் புகழாரம்!

Published on 15/11/2021 | Edited on 15/11/2021

 

hk

 

தமிழ்நாட்டில் கடந்த ஒருவாரமாக வடகிழக்கு பருவமழை இயல்புக்கு மாறாக அதிகப்படியான அளவு பொழிந்தது. குறிப்பாக வட மாவட்டங்களில் அதீத கனமழை பொழிவு இருந்தது. மற்ற மாவட்டங்களை விட சென்னையில் அதிக பாதிப்பு இருந்தது. பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த ஒருவாரமாக ஆய்வு செய்துவருகிறார். முதல் 5 நாட்கள் சென்னை, காஞ்சிபும், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் மழை பாதிப்பு தொடர்பான ஆய்வை முடித்திருந்த நிலையில், நேற்று முன்தினம் (13.11.2021) டெல்டா பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். இந்நிலையில் இன்று கன்னியாகுமரி மாவட்டங்களில் ஆய்வு செய்ய இருக்கிறார்.

 

இதற்கிடையே, முதல்வரின் இந்த மக்கள் பணியை நாகை எம்எல்ஏ ஆளூர் ஷாநவாஸ் வெகுவாகப் பாராட்டியுள்ளார். அதில், "நேற்று முன்தினம் நாகப்பட்டினம் வந்தார். நேற்று சென்னையில் சுழன்றார். இன்று கன்னியாகுமரி விரைந்தார். 6 மாதத்தில் 5 மாதம் கரோனா ஒழிப்பில் கழிந்தது. மீதம் மழை வெள்ளத்தில் கரைந்தது. இடரை எதிர்கொண்டு எழுகிறார். ஒவ்வொரு நாளும் ஓயாமல் உழைக்கிறார். களத்தில் நின்று மக்களை காக்கிறார்" என்று தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்