Skip to main content

'விண்வெளி பயணத்தில் பஞ்சாங்கம்...'-சர்ச்சைக்கு விளக்கமளித்த மயில்சாமி அண்ணாதுரை!

Published on 26/06/2022 | Edited on 26/06/2022

 

'' Almanac in space travel ... '' - Myilsami Annathurai responds to controversy!

 

இஸ்ரோவில் பணியாற்றிய வான்வெளி ஆராய்ச்சியாளர் நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து 'ராக்கெட்ரி - நம்பி விளைவு' என்ற படத்தை நடிகர் மாதவன் இயக்கியுள்ளார். இப்படத்தை இயக்கியது மட்டுமின்றி நம்பி நாராயணனின் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  இப்படம் வரும் ஜூலை 1 ஆம் தேதி தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது.

 

இதனிடையே சமீபத்தில் நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பேசிய மாதவன், “ஆயிரம் ஆண்டுக்கு முன் நம் முன்னோர்கள் எழுதிய பஞ்சாங்கத்திற்கும், தற்போது உள்ள விஞ்ஞானத்திற்கும் தொடர்பு இருக்கிறது. மேலும் பஞ்சாங்கத்தின் உதவியுடன் தான் இஸ்ரோ செவ்வாய் கிரகத்திற்கு செயற்கைக்கோளை அனுப்ப முடிந்தது" என்று தெரிவித்திருந்தார். இவரின் பேச்சு சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலான நிலையில் நடிகர் மாதவனுக்கு எதிராக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இன்னும் சிலர் மாதவனை மீம்ஸ் போட்டு ட்ரோல் செய்து வருகின்றனர்.

 

'' Almanac in space travel ... '' - Myilsami Annathurai responds to controversy!

 

இந்நிலையில் இஸ்ரோவின் முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை இது குறித்து விளமளித்துள்ளார். ''மாதவன் பேசிய கருத்துக்கள் சரிதான். விண்வெளி பயணங்களுக்கு பஞ்சாங்கம் பார்த்து அனுப்புவது உலகளாவிய நடைமுறைதான். ஆனால் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பஞ்சாங்கம் பார்த்து அனுப்புவதில்லை. அறிவியல்பூர்வமாக நேரம் குறிக்கப்பட்ட பின்னர் அனுப்பப்படுகிறது. கோள்களுடைய இருப்பிடம், கோள்களிலிருந்து பூமியின் இருப்பிடம் ஆகியவற்றை தொழில்நுட்ப ரீதியாக அணுகிய பின்னரே நேரம் குறிக்கப்படுகிறது'' என்று கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘இன்சாட் - 3 டி.எஸ்.’ செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது!

Published on 17/02/2024 | Edited on 17/02/2024
'Insat - 3DS' satellite successfully launched

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), வானிலை மற்றும் பேரிடர் எச்சரிக்கை தகவல்களை முன்கூட்டியே பெறுவதற்காக ‘இன்சாட் - 3டிஎஸ்’ என்ற செயற்கைக்கோளை வடிவமைத்துள்ளது. இதனை ஆந்திரா மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி எப்-14 ராக்கெட் விண்ணில் பாய்வதற்கான கவுண்ட் டவுன் நேற்று (16-02-24) பகல் 2 மணி 05 நிமிடத்தில் தொடங்கியது. மேலும், இந்த ராக்கெட் இன்று மாலை 5.35 மணிக்கு விண்ணில் செலுத்தவுள்ளதாக இஸ்ரோ தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், வானிலை ஆய்வுக்கான அதிநவீன இன்சாட்-3டிஎஸ் (INSAT-3DS) செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி - எப் 14 ராக்கெட் இன்று (17-02-24) மாலை 5:35 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. அதிநவீன தொழில்நுட்பத்தில் உருவான வானிலை செயற்கைக்கோளை சுமந்து செல்லும் ஜி.எஸ்.எல்.வி எப் -14 ராக்கெட் சுமார் 420 டன் எடை கொண்டதாகும். 

2,274 கிலோ எடையுடன் 6 சேனல் இமேஜர் உட்பட 25 விதமான ஆய்வுக் கருவிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இன்சாட்-3டிஎஸ் செயற்கைக்கோள் மூலம் வானிலை மாற்றத்தை துல்லியமாகக் கண்டறிய முடியும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. 

Next Story

புத்தாண்டின் முதல் நாளில் சாதனை படைத்த இந்தியா!

Published on 01/01/2024 | Edited on 01/01/2024
Record-breaking ISRO; PSLV C-58 rocket hits

உலகிலேயே முதல் நாடாக நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட சந்திரயான் 3 வெற்றிகரமாகத் தனது ஆய்வுகளை நடத்தியது. இதனைத் தொடர்ந்து, இந்தியா சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல்1-ஐ அனுப்பி அடுத்த சாதனையை நிகழ்த்தியது. 

விண்வெளியில் உள்ள கருந்துளை, நியூட்ரான் நட்சத்திரங்களின் செயல்பாட்டை ஆய்வு செய்வதற்காக இஸ்ரேல் சார்பில் ‘எக்ஸ்போசாட்’ (எக்ஸ்-ரே போலாரிமீட்டர் சாட்டிலைட்) எனும் அதிநவீன செயற்கைக்கோளை இஸ்ரேல் வடிவமைத்திருந்தது. மொத்தம் 469 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள், பூமியிலிருந்து சுமார் 650 கி.மீ. தொலைவில் நிலைநிறுத்தப்பட்டு ஆய்வு நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளது.

இந்த ஆய்வு நடவடிக்கைகளை எடுப்பதற்காக ‘எக்ஸ்பெக்ட்’ (எக்ஸ்-ரே ஸ்பெக்ட்ரோகிராபி), ‘போலிக்ஸ்’ (எக்ஸ்ரே போலாரிமீட்டர்) ஆகிய 2 அதிநவீன சாதனங்கள் அதில் பொருத்தப்பட்டுள்ளன. இவை, விண்வெளியில் வியாபித்துள்ள ஊடுகதிர்களின் (எக்ஸ்ரே) துருவ அளவு மற்றும் கோணத்தை அளவிடுதல், நியூட்ரான் நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் கதிரியக்கம், கருத்துக்களை வாயுக்களின் திரள் உள்பட பலவற்றை ஆராய உள்ளது. மேலும், இவை செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்ட பின்பு புவி தாழ்வட்டப் பாதைக்கு வந்து ஆய்வுகளை மேற்கொள்ளும். 

இந்த நிலையில், 25 மணி நேர கவுண்டவுனுடன் நேற்று (31-12-23) காலை 8:10 மணிக்கு தொடங்கிய விண்வெளி ஆய்வு செயற்கைக்கோளுடன் ‘பிஎஸ்எல்வி சி -58’ ராக்கெட் ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து இன்று (01-01-24) காலை 9.10 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. எக்ஸ்போசாட் என்ற செயற்கைக்கோள் உள்பட 11 செயற்கைக்கோள்களை சுமந்து சென்ற பிஎஸ்எல்வி சி-58 ராக்கெட், பூமியிலிருந்து 650 கி.மீ உயரத்தில் புவி வட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. 2024 ஆம் ஆண்டில் இஸ்ரோ விண்ணில் ஏவிய முதல் ராக்கெட் இதுவாகும்.