காவிரியில் இருந்து தமிழகத்திற்கு ஆண்டுக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தது.

Advertisment

தமிழகத்திற்கு ஏற்கனவே 192 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும் என நடுவர் நீதிமன்றம் கூறி இருந்த நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பில் 14.75 டி.எம்.சி. குறைக்கப்பட்டு 177.25 டி.எம்.சி. தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால் தமிழக விவசாயிகள் கடும் அதிருப்தி அடைத்தனர்.

Advertisment

இந்த விவகாரம் தொடர்பாக, எதிர்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 23-ம் தேதி அண்ணா அறிவாலையத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்பில் உள்ள சாதக, பாதகங்கள் குறித்து சட்ட நிபுணர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் வரும் 22-ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் காலை 1.30 மணிக்கு அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

Advertisment