சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா தற்போது அவரின் தண்டனை காலத்தை நிறைவு செய்த நிலையில் இன்று காலை பெங்களூருவிலிருந்து சென்னை கிளம்பி உள்ளார். காலை 7.30 மணி அளவில் அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் பயணத்தைத் தொடங்கிய அவர் தமிழக எல்லையைக் கடந்து வந்துகொண்டிருக்கிறார்.
இந்நிலையில் நாகையிலிருந்து சசிகலாவை வரவேற்க சென்றஅமமுகவினரை போலீசார்தடுத்து நிறுத்தியதால் அக்கட்சியினர்சாலைமறியலில் ஈடுபட்டனர். நாகையிலிருந்து சசிகலாவை வரவேற்க சென்றஅமமுகவினர் புறப்பட்டு சென்ற நிலையில்தமிழக புதுச்சேரி எல்லையில் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். அதனையடுத்து சசிகலாவை வரவேற்கதங்களை அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி வாஞ்சூர்சோதனைசாவடி அருகே அமமுகவினர் சாலையில் அமர்ந்துமறியலில் ஈடுபட்டனர்.