Skip to main content

ரம்ஜானுக்காக வேலூரில் துணிக்கடைகளை திறக்க அனுமதி

Published on 24/05/2020 | Edited on 24/05/2020
 Allow clothes to be opened at Vellore for Ramzan

 

தமிழகம் முழுவதும் திங்கட்கிழமை ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என அரசு தலைமைக் காஜி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்று ரமலான் பிறை தென்படாததால் தமிழகத்தில் திங்கள் கிழமைதான் (நாளை ) ரமலான் கொண்டாடப்படும் என தெரிவித்துள்ளார். 


இந்நிலையில் வேலூரில் துணிக்கடைகள் இன்றும், நாளையும் இரவு 9 மணி வரை திறக்கலாம் என வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் உத்தரவு பிறப்பித்துள்ளார். திறக்கப்படும் கடைகளில் ஏசி பயன்பாடு முற்றிலும் இருக்கக்கூடாது. சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

லாரி ஏறியதால் பெண் தலைமை காவலர் பரிதாபமாக உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Female head constable passed away in lorry collision

வேலூர் மாவட்டம் அகரம் பகுதியை சேர்ந்த தட்சிணாமூர்த்தி மனைவி பரிமளா (42) இவர் ஆம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் ஏப்ரல் 17 ஆம் தேதி தேர்தல் பணிக்காக திருப்பத்தூர் மாவட்ட ஆயுதப்படையில் நடைபெற்ற கலந்தாய்வில் கலந்து கொண்டு மாலை வீட்டுக்கு புறப்பட்டார்.

திருப்பத்தூரில் இருந்து மாதனூர் வரை பேருந்தில் சென்றுள்ளார். மாதனூரில் இருந்து தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது, மாதனூர்- ஒடுகத்தூர் சாலையில் தாகூர் பள்ளி அருகில் ஆட்டோ ஒன்று குறுக்கே வந்ததால் சட்டென்று பிரேக் அடித்துள்ளார். அப்போது பின்னால் உட்கார்ந்து இருந்த பெண் தலைமை காவலர் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ஒடுகத்தூரில் இருந்து மாதனூர் நோக்கி வந்த லாரி தலைமை காவலர் பரிமளா மீது ஏறி இறங்கியதில் தலை நசுங்கிய நிலையில்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பிரேதத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். படுகாயமடைந்த பெண் தலைமை காவலரின் கணவர் தட்சிணாமூர்த்தி மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தை ஏற்படுத்திய லாரியை பறிமுதல் செய்து ஓட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பழுதான லோடு ஆட்டோவை சாலையோரம் நிறுத்தி விபத்து ஏற்பட காரணமாக இருந்த ஒர்க் ஷாப் உரிமையாளரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் அரசு மருத்துவமனையில் விபத்து குறித்து நேரில் விசாரணை மேற்கொண்டு உயிரிழந்த தலைமை காவலர் பரிமளாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இது காவல்துறையினர் மற்றும் அப்பகுதி மக்கள்  மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Next Story

ரசிகர்களுக்கு தடியடி - சல்மான் கான் வீட்டில் பரபரப்பு

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
police lathi charge in Salman Khan fans

ரமலான் பண்டிகை இன்று (11.04.2024) கொண்டாடப்படும் என அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அய்யூப் அறிவித்திருந்தார். அதன்படி இன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. அதனால் காலை முதலே இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து மசூதிகளில் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் ரமலான் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் ரமலான் மற்றும் தனது பிறந்தநாளின் வீட்டின் முன் கூடியிருக்கும் ரசிகர்களைச் சந்திப்பார் சல்மான் கான். அந்த வகையில் இன்று மும்பையில் உள்ள சல்மான் கான் வீட்டின் முன்பு, ரமலான் வாழ்த்து பெற அவரது ரசிகர்கள் நூற்றுக்கணக்கில் கூடியிருந்தனர். அப்போது அவர்கள் ஆரவாரம் செய்து கூச்சலிட்டனர். அவர்களால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அதனால் அவர்களை தடியடி நடத்தி போலீஸார் அப்புறப்படுத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.   

சல்மான் கான், தற்போது ஏ.ஆர் முருகதாஸுடன் கூட்டணி வைத்துள்ளார். இப்படத்தை சஜித் நதியாத்வாலா தயாரிக்க அடுத்த ஆண்டு ரமலான் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது. இந்த அறிவிப்பு கடந்த மாதம் வெளியான நிலையில், ரமலான் நாளான இன்று படத்திற்கு சிக்கந்தர் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.