Skip to main content

ரஜினியுடன் கூட்டணி? மு.க.அழகிரி ஆலோசனை!

Published on 16/11/2020 | Edited on 16/11/2020

 

Alliance with Rajini! MK Alagiri advice!
                                                                கோப்புப் படம்

 

 

தி.மு.க.வில் மீண்டும் இணைந்துவிடுவோம் என்கிற நம்பிக்கையில் இரண்டு வருடங்களாக காத்திருந்தார் மு.க.அழகிரி. அவரை இணைத்துக்கொள்ள கலைஞர் குடும்பமும் முயற்சித்தது. ஆனால், ஸ்டாலினும் அவரது குடும்பமும் இதனை ஏற்கவில்லை.

 

இதனால், அரசியலில் இருந்து துறவறம் செய்கிற அளவுக்கு அமைதியாக இருந்தார் அழகிரி. தனிக்கட்சி ஆரம்பித்து தனது அரசியலை அழகிரி காட்டும்போது, அவருடன் இணைந்து செயலாற்ற தி.மு.க.வின் அதிருப்தியாளர்கள் நினைத்திருந்தனர். ஆனால், அழகிரியின் நீண்ட மௌனம் அவர்களை தி.மு.க.விலேயே இருக்க வைத்தது.

 

இந்த நிலையில், தீபாவளிக்காக ரஜினியை தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார் அழகிரி. இருவரும் பரஸ்பரம் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்ட நிலையில் சில நிமிடங்கள் அரசியலையும் பேசியிருக்கிறார்கள். அப்படி பேசிக்கொண்டதில் அழகிரியிடம் உற்சாகம் கரைபுரண்டோடியிருக்கிறது.

 

இந்த சூழலில், தீபாவளி வாழ்த்துகளுக்காக தன்னை தொடர்புகொண்ட தனது ஆதரவாளர்களிடம், தேர்தல் அரசியல் குறித்து மனம் விட்டு பேசியுள்ளார். அழகிரியின் பேச்சில் திக்குமுக்காடி போயிருக்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.

 

இதுகுறித்து நம்மிடம் பேசியவர்கள், ‘தனது மௌனத்தை கலைக்க அண்ணன் அழகிரி முடிவு செய்துவிட்டார். தி.மு.க.விடம் இணைவது குறித்து கடைசியாக ஒரே ஒருமுறை மட்டும் பேசிப் பார்ப்பது என்றும், அதில் சாதகமான பதில் இல்லை எனில் தனிக்கட்சி துவக்குவது என்றும் முடிவு செய்திருக்கிறார். இதுபற்றி ஆதரவாளர்களிடம் கலந்தாலோசிக்கவிருக்கிறார். அதன்பிறகு அழகிரியின் ஆட்டம் ஆரம்பமாகும். ரஜினி அரசியலுக்கு வரும் நிலையில் அவருடன் கூட்டணி அமைப்பார்’ என்கிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வட்டாட்சியரை தாக்கியதாகத் தொடரப்பட்ட வழக்கில் மு.க. அழகிரி விடுதலை!

Published on 16/02/2024 | Edited on 16/02/2024
MK Alagiri liberation for case of the district officer

கடந்த 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள வெள்ளூர் வல்லடிகாரர் கோயிலுக்குள் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக புகார் எழுந்தது. இது குறித்து மேலூர் தேர்தல் அதிகாரியும், தாசில்தாருமான காளிமுத்து என்பவர் ஒளிப்பதிவாளர் உடன் சென்று பணப்பட்டுவாடா செய்ததை வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது. இதற்கு முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் தாசில்தார் காளிமுத்துவை தாக்கியதாக மு.க.அழகிரிக்கு எதிராக தாசில்தார் காளிமுத்து தரப்பில் கீழவளவு காவல் நிலையத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் மு.க.அழகிரி, மதுரையின் துணை மேயராக இருந்த மன்னன், திமுக நிர்வாகிகளான ரகுபதி, திருஞானம், ஒத்தப்பட்டி செந்தில், பொன்னம்பலம், தமிழரசன், நீதித்தேவன், சேகர், மயில்வாகனன், ராகவன், ராமலிங்கம், சோலை நாகராஜா, வெள்ளையா பாலகிருஷ்ணன், அய்யனார், கருப்பண்ணன், பாலு, போஸ் உட்பட 21 பேர் மீது அரசு அதிகாரிகளை தாக்குதல், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.

இது தொடர்பான வழக்கு விசாரணை மேலூர் நீதிமன்றத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு தொடரப்பட்டு 2019 ஆம் ஆண்டு வரை நடைபெற்று வந்தது. அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் மதுரை மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இதற்கிடையே வழக்கு விசாரணை காலத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.

இதனையடுத்து வழக்கு விசாரணையின் போது சாட்சிய விசாரணை, அரசுத் தரப்பு வாதங்கள், எதிர்த்தரப்பு வாதங்கள் கடந்த 13 ஆம் தேதி நிறைவு பெற்றன. இந்த வழக்கில் இன்று (16.02.2024) தீர்ப்பு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மு.க. அழகிரி, மதுரையின் முன்னாள் துணை மேயர் மன்னன் உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என கூறி நீதிபதி முத்துலட்சுமி 17 பேரை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளார். 

Next Story

மு.க.அழகிரி வழக்கில் இன்று தீர்ப்பு!

Published on 16/02/2024 | Edited on 16/02/2024
Today's verdict in M.K. Alagiri case

கடந்த 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள வெள்ளூர் வல்லடிகாரர் ஊரில் உள்ள கோயிலுக்குள்  வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக புகார் எழுந்தது. இது குறித்து மேலூர் தேர்தல் அதிகாரியும், தாசில்தாருமான காளிமுத்து என்பவர் ஒளிப்பதிவாளர் உடன் சென்று பணப்பட்டுவாடா செய்ததை வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது. இதற்கு முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் தாசில்தார் காளிமுத்துவை தாக்கியதாக மு.க.அழகிரிக்கு எதிராக தாசில்தார் காளிமுத்து தரப்பில் கீழவளவு காவல் நிலையத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் மு.க.அழகிரி, மதுரையின் துணை மேயராக இருந்த மன்னன், திமுக நிர்வாகிகளான ரகுபதி, திருஞானம், ஒத்தப்பட்டி செந்தில், பொன்னம்பலம், தமிழரசன், நீதித்தேவன், சேகர், மயில்வாகனன், ராகவன், ராமலிங்கம், சோலை நாகராஜா, வெள்ளையா பாலகிருஷ்ணன், அய்யனார், கருப்பண்ணன், பாலு, போஸ் உட்பட 21 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.

இது தொடர்பான வழக்கு விசாரணை மேலூர் நீதிமன்றத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு தொடரப்பட்டு 2019 ஆம் ஆண்டு வரை நடைபெற்று வந்தது. அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் மதுரை மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இதனையடுத்து வழக்கு விசாரணையின் போது சாட்சிய விசாரணை, அரசுத் தரப்பு வாதங்கள், எதிர்த்தரப்பு வாதங்கள் நிறைவு பெற்றன. இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.