Advertisment

“கூட்டணி டெல்லியில் தான் தமிழ்நாட்டில் இல்லை” - அன்புமணி ராமதாஸ்

'The alliance is in Delhi; Not in Tamil Nadu'-pmk Anbumani Ramadoss interview

பாமகதலைவர்அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ''நாங்கள் டெல்லியில் கூட்டணியில் இருக்கிறோம். தமிழ்நாட்டில் இதுவரை கூட்டணியில் இல்லை'' என்றார்.

Advertisment

அதற்கு செய்தியாளர்கள், 'என்ன இப்படி சொல்கிறீர்கள்' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அன்புமணி, ''ஏன் திமுக அப்படி இருந்தது கிடையாதா? திமுக டெல்லியில் ஒரு நிலைப்பாடு தமிழகத்தில் ஒரு நிலைப்பாடு வைத்திருக்கவில்லையா. இருந்திருக்கிறார்கள் அல்லவா. அந்த நிலைப்பாடு தான் எங்களுடையது. நாங்கள் 2026ல் நடக்கும் சட்டமன்றத் தேர்தலில் பாமக ஒருமித்தகருத்துடையவர்களுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்கும். அதற்கு ஏற்ப வியூகங்களை நாங்கள் 2024 தேர்தலில் வகுப்போம். பொறுத்திருங்கள் காத்திருங்கள்'' என்றார்.

Advertisment

ராகுல் காந்தி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு குறித்த கேள்விக்கு, ''ராகுல் காந்தி தீர்ப்பு குறித்தசெய்தி இப்பொழுது தான் கேள்விப்பட்டேன். அதை முழுமையாக தெரிந்து கொண்டுகருத்து சொல்கிறேன். இருந்தாலும் ராகுல் காந்திக்கு முன்னால் கிடைத்த தண்டனை மிகப் பெரிய தண்டனை. இது சாதாரண அவதூறு வழக்கு தான். இதற்கு போய் பதவி பறித்தது தவறு. இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் சொன்ன தீர்ப்பு சரியாக தெரியவில்லை. தெரிந்த பிறகு நான் அதைப் பற்றி பேசுகிறேன்.'' என்றார்.

admk anbumani pmk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe