Advertisment

'எதிர்க்கட்சியினர் பரிதவிக்கின்றனர்... அடுத்த தேர்தலிலும் இவர்களுடன்தான் கூட்டணி' - துணை முதல்வர் ஓ.பி.எஸ் பேச்சு!

alliance with BJP in next elections too' - Deputy Chief Minister OPS speech

Advertisment

இரண்டு நாள் அரசு முறை பயணமாக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் தமிழகம் வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்பொழுது சென்னை கலைவாணர் அரங்கில் நடக்கும்அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிமற்றும் துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆகியோர் அவரை வரவேற்றனர்.முன்னதாக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், காணொளிக் காட்சி மூலமாகதிருவள்ளூர் தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கத்தை, நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார்.61,843 கோடியில்மெட்ரோ இரண்டாம் கட்ட திட்டத்திற்கும்அடிக்கல் நாட்டினார். அதேபோல் கோவை அவிநாசி சாலையில் 1,620 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உயர்மட்ட சாலை திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். கரூர் மாவட்டம் நஞ்சை புகலூரில் 406 கோடி ரூபாய் மதிப்பீட்டில், காவிரி ஆற்றில் கதவணை கட்டும் திட்டத்திற்கும்அடிக்கல் நாட்டினார்.309 கோடி மதிப்பில் சென்னை வர்த்தக மையத்தை விரிவுபடுத்தும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். அதேபோல் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் 3 திட்டங்கள் உள்ளிட்ட மேலும் பல திட்டங்களுக்குஅடிக்கல் நாட்டினார்.

alliance with BJP in next elections too' - Deputy Chief Minister OPS speech

Advertisment

இந்நிகழ்ச்சியில் துணைமுதல்வர் பன்னீர் செல்வம் பேசுகையில், அ.தி.மு.க அரசு தொடர்ந்து மக்களுக்கான சேவைகளைச் சிறப்பாகச் செய்து வருகிறது. ஆனால் இந்தச் சாதனைகளை எல்லாம் தமிழக மக்கள் பார்க்கிறார்கள், பாராட்டுகிறார்கள், அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். எதிர்க்கட்சியினரும் இதைப் பார்க்கிறார்கள் ஆனால் பரிதவிக்கிறார்கள். அ.தி.மு.கவிற்கு மக்கள் செல்வாக்குத் தினம் தினம் கூடுகிறது எனப் பதைபதைக்கிறார்கள். அதனால், மனம் பொறுக்க முடியாமல் குமுறுகிறார்கள், குறைசொல்கிறார்கள். ஆனாலும் மூன்றாவது முறையாக நாங்கள் வெற்றிக்கனியைப் பறிப்போம். தேசிய அளவில் நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல பிரதமர்மோடி ஆற்றலுடன் செயல்பட்டு வளர்க்கிறார். இனி வரும் தேர்தலிலும் பா.ஜ.க அ.தி.மு.க கூட்டணி தொடரும் என்பதை இந்தக் கூட்டத்தில் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

ops_eps Amitsha
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe