Advertisment

வாக்குபெட்டி அறைக்குள் இருவர் புகுந்ததாக குற்றச்சாட்டு... நாகையில் பதற்றம் 

நேற்று உள்ளாட்சி தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் நாகையில் வாக்குபெட்டிகள் வைத்துள்ள கல்லூரியின் அறைக்குள் 2 தனிநபர்கள் புகுந்ததாக குற்றச்சாட்டு எழுந்து, திமுக உள்ளிட்ட கட்சியினர் கல்லூரி வளாகத்தில் ஒன்று திரண்டுமுற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisment

நாகை மாவட்டம் சீர்காழி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று முதற்கட்ட தேர்தல் நடந்தது, வாக்குபெட்டிகள் அனைத்தும் விவேகானந்தா கல்வி குழும கல்லூரியின் கட்டிடத்தில் வைக்கப்பட்டிருந்தது. அந்த வாக்கு பெட்டிகளில் பெரும்பாலானவை உடைக்கப்பட்டும், வாக்கு சீட்டுகள் சிதறப்பட்டும் கிடந்ததை கேள்விப்பட்டு போட்டியிட்ட வேட்பாளர்களும், பொதுமக்களும் அங்கு கூடியுள்ளனர்.

Advertisment

அதேபோல் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டிருந்த அறைக்குள் இருந்தநபர்கள் எலட்ரிக் வேலை செய்வதற்காக உள்ளே சென்றதாக தேர்தல் அதிகாரிகள் மற்றும் போலீசார் தரப்பில் கூறப்பட்டதாக தகவல்கள் வந்துள்ளன. இந்த தகவலால் அங்கு திமுக உள்ளிட்டகட்சியை சேர்ந்தவர்கள் சம்பந்தப்பட்ட கல்லூரி வளாகத்தில்முற்றுகை போராட்டம் நடத்திவருவதால் அங்கு பதற்றம் உருவாகியுள்ளது.

local election nagai Tamilnadu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe