Advertisment

எல்லையில் சாராயம், அரிசி கடத்தல்!!! - தகவல் சொன்னதாக இளைஞர் மீது தாக்குதல்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திர எல்லைப்பகுதியில் வெலதிகாமணிபென்டா கிராமம் வழியாக பாரதி நகர் சோதனைச்சாவடி வழியே தமிழக எல்லையான திருப்பத்தூர் மாவட்ட எல்லைக்குள் வரும் சாராயத்தை தும்பேரி கிராம பகுதியில் வைத்துவிற்கப்படுகின்றன. கரேனா வைரஸ் பரவலை தடுக்க 144 தடையுத்தரவு போடப்பட்டுள்ளதால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் குடிமகன்களுக்கு மதுவின் தேவை அதிகரித்துள்ளது. இதனால் ஆந்திராவில் இருந்து காலை, மதியம், இரவு என இருசக்கர வாகனங்களில் சாராயம் கடத்த தொடங்கிவிட்டனர். இதுபற்றிய வீடியோ பதிவு சமூக வளைத்தளங்களில் வெளியாகின.

Advertisment

Allegations of liquor and rice trafficking at the border ...

இதேபோல் சில மாதங்களுக்கு முன்பும் இதே பாதையில் சாராயம் கடத்தல், அரிசி கடத்தல் நடப்பது தொடர்பாக அப்பகுதி இளைஞர்கள் மூலம் தகவல் வெளியே வந்து காவல்துறையை சேர்ந்தவர்களே, உங்களுக்கு தேவையில்லாத வேலையிது எனச்சொல்லி மிரட்டிய ஆடியோக்களும் வெளியாகி பரபரப்பாகின. இந்நிலையில்தான் 144 தடையுத்தரவை மீறி கடத்தல் நடப்பது குறித்து வீடியோ வெளியாகின.

Advertisment

இந்நிலையில் வாணியம்பாடி அருகே தமிழக, ஆந்திர எல்லைப்பகுதியான அண்ணாநகர்சோதனை சாவடி அருகே ஆந்திராவிலிருந்து சாராயம் கடத்தி வருவதாகவும், தமிழகத்தில் இருந்து அரிசியை ஆந்திராவுக்கு கடத்துவதாகவும் அதிகாரிகளுக்கு மற்றும் காவல்துறையினருக்கு தகவல் கொடுப்பது மற்றும்வீடியோ எடுத்து வெளியிட்டஅதே பகுதியைச் சேர்ந்த சிவராஜ் மற்றும் அவரது சகோதரர் சிங்காரவேலன் என்பவர்களுக்குதான் கொலை மிரட்டல் செல்போனில் வந்துகொண்டு இருந்தது.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

இந்நிலையில் ஏப்ரல் 3ந்தேதி சிங்காரவேலன் தனது கிராம பகுதியில் உள்ள கடைக்கு சென்று கொண்டிருந்தபோது, பின்தொடர்ந்து சென்ற திருப்பதி என்பவர் அவரைசரமாரியாக தாக்கியுள்ளார். இதுபற்றி காவல்நிலையத்தில் அவர்கள் புகார் தெரிவிக்க, அதன்மீது சி.எஸ்.ஆர் கூட பதிவிடாமல் காவல்துறையினர் வைத்துள்ளனர் எனக்கூறப்படுகிறது.

Smuggling vaniyambadi thirupathur
Advertisment
Show comments
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe