Skip to main content

எல்லையில் சாராயம், அரிசி கடத்தல்!!! - தகவல் சொன்னதாக இளைஞர் மீது தாக்குதல்

Published on 04/04/2020 | Edited on 04/04/2020

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திர எல்லைப்பகுதியில் வெலதிகாமணிபென்டா கிராமம் வழியாக பாரதி நகர் சோதனைச்சாவடி வழியே தமிழக எல்லையான திருப்பத்தூர் மாவட்ட எல்லைக்குள் வரும் சாராயத்தை தும்பேரி கிராம பகுதியில் வைத்துவிற்கப்படுகின்றன. கரேனா வைரஸ் பரவலை தடுக்க 144 தடையுத்தரவு போடப்பட்டுள்ளதால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் குடிமகன்களுக்கு மதுவின் தேவை அதிகரித்துள்ளது. இதனால் ஆந்திராவில் இருந்து காலை, மதியம், இரவு என இருசக்கர வாகனங்களில் சாராயம் கடத்த தொடங்கிவிட்டனர். இதுபற்றிய வீடியோ பதிவு சமூக வளைத்தளங்களில் வெளியாகின.

 

Allegations of liquor and rice trafficking at the border ...

 

இதேபோல் சில மாதங்களுக்கு முன்பும் இதே பாதையில் சாராயம் கடத்தல், அரிசி கடத்தல் நடப்பது தொடர்பாக அப்பகுதி இளைஞர்கள் மூலம் தகவல் வெளியே வந்து காவல்துறையை சேர்ந்தவர்களே, உங்களுக்கு தேவையில்லாத வேலையிது எனச்சொல்லி மிரட்டிய ஆடியோக்களும் வெளியாகி பரபரப்பாகின. இந்நிலையில்தான் 144 தடையுத்தரவை மீறி கடத்தல் நடப்பது குறித்து வீடியோ வெளியாகின.

இந்நிலையில் வாணியம்பாடி அருகே தமிழக, ஆந்திர எல்லைப்பகுதியான அண்ணாநகர் சோதனை சாவடி அருகே ஆந்திராவிலிருந்து சாராயம் கடத்தி வருவதாகவும், தமிழகத்தில் இருந்து அரிசியை ஆந்திராவுக்கு கடத்துவதாகவும் அதிகாரிகளுக்கு மற்றும் காவல்துறையினருக்கு தகவல் கொடுப்பது மற்றும் வீடியோ எடுத்து வெளியிட்ட அதே பகுதியைச் சேர்ந்த சிவராஜ் மற்றும் அவரது சகோதரர் சிங்காரவேலன் என்பவர்களுக்குதான் கொலை மிரட்டல் செல்போனில் வந்துகொண்டு இருந்தது.

இந்நிலையில் ஏப்ரல் 3ந்தேதி சிங்காரவேலன் தனது கிராம பகுதியில் உள்ள கடைக்கு சென்று கொண்டிருந்தபோது, பின்தொடர்ந்து சென்ற திருப்பதி என்பவர் அவரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதுபற்றி காவல்நிலையத்தில் அவர்கள் புகார் தெரிவிக்க, அதன்மீது சி.எஸ்.ஆர் கூட பதிவிடாமல் காவல்துறையினர் வைத்துள்ளனர் எனக்கூறப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அரசு மருத்துவமனையில் வீசும் துர்நாற்றம்; நோயாளிகள் குற்றச்சாட்டு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Bad smell wafting from Vaniyambadi Government Hospital

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பெருமாள்பேட்டை பகுதியைச்  சேர்ந்தவர் சத்யா (30). கர்ப்பிணியான சத்யாவின் கரு கலைந்துள்ளது. இதனால் கடந்த வெள்ளிகிழமை அன்று மிகுந்த வயிற்று வலி ஏற்பட்டு உடல் நிலை சரியில்லாமல் சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் கருக்கலைப்பு ஏற்பட்டுள்ளதாகவும்  மேலும் மருத்துவமனையில்  சேர்ந்து வயிற்றை முழுவதுமாக சுத்தம் செய்ய வேண்டும் என கூறியுள்ளார்கள்.

இதனைத் தொடர்ந்து, கடந்த வெள்ளிக்கிழமை சிகிச்சைக்காக உள்நோயாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.அதே வார்டில் சுமார் 7 நோயாளிகள் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் தினமும் காலையில் ஒரு ஊசியும் மாலையில் ஒரு ஊசியும் செலுத்தி விட்டு மாத்திரைகள் கொடுத்துவிட்டு செல்வதாகவும் நேற்று வரை வயிற்றை சுத்தம் செய்து உரிய சிகிச்சை அளிக்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனை வார்டில் கட்டில்கள் மேலிருக்கும் போர்வைகள் சரியாக சுத்தம்  செய்யப்படாமல் ரத்தக் கரையுடன் இருப்பதாகவும் தங்கியுள்ள அறையின் கழிவறையிலிருந்து அதிகப்படியான துர்நாற்றம் வீசுவதால்,  அறையில் உள்ள அனைவரும்  துர்நாற்றம் தாங்க முடியாமல் இரவு நேரத்தில் மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்து உணவு உண்பதும்  உறங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நோயாளிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Next Story

ஆவணம் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ. 24 லட்சம் பறிமுதல்; பறக்கும் படை அதிகாரிகள் தீவிரம்

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
Near Tirupattur taken without documents Rs. 24 lakh forfeited

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை சேர்ந்த பாலாஜி என்பவர் தனியார் வங்கியிலிருந்து ரூ 14 லட்சத்து 54 ஆயிரம் ரூபாயை எடுத்துகொண்டு திம்மாம்பேட்டை பகுதியில் உள்ள தனியார் ஏ.டி.எம் -ல் நிரப்புவதற்காக இருசக்கர வாகனத்தில் எடுத்து சென்றுள்ளார். அப்போது வாணியம்பாடி அடுத்த தும்பேரி கூட்டு சாலையில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் ஷோபனா தலைமையிலான அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, இரு சக்கர வாகனத்தில் சென்ற பாலாஜியை நிறுத்தி சோதனை செய்த போது அவருடைய பையில் வைத்திருந்த  ரூ.14.54 லட்சம் பணம் இருப்பது கண்டறிந்தனர். அவர் எடுத்து சென்ற பணத்திற்கு உரிய ஆவணம் இல்லாததால்  அந்த பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரி ஷோபனா தலைமையிலான பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்த பணத்தை  வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அஜித்தா பேகத்திடம் ஒப்படைத்தனர்.

Near Tirupattur taken without documents Rs. 24 lakh forfeited

அதேபோல், திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த வெங்களாபுரம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே குழு ஏ பறக்கும் படை அலுவலர் வினோதினி தலைமையில் சோதனை செய்த பொழுது, திருப்பத்தூர் அடுத்த திம்மனாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் மகன் கோவிந்தராஜ் என்பவர் முறையான ஆவணம் இன்றி  காரில் சுமார் 9,32,400 ரூபாய் ரொக்க பணத்தை கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பகுதியில் கடன் வாங்கிய நபரிடம் திரும்ப கொடுப்பதற்காக எடுத்துக் கொண்டு சென்றுள்ளதாக கூறியுள்ளார்.

தேர்தல் விதிமுறைப்படி தனி நபர் ஆவணமின்றி 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் எடுத்து செல்லக்கூடாது என்பதால் பறிமுதல் செய்யப்பட்ட ரூபாயை பறக்கும் படை அலுவலர் வினோதினி கருவூலத்தில் ஒப்படைக்க சென்றபோது மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட பணம் சார் கருவூல அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. ஒரே நாளில் திருப்பத்தூர் மாவட்டத்தில் பறக்கும் படையினர் 23 லட்சத்தை கைப்பற்றியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.