
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கரோனா டெஸ்டுக்காக அழைத்து வந்தவர்களை மோசமான அறையில் தங்கவைத்து அவதிப்படுத்துவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கரோனா தொற்று உள்ளதா என்று உறுதிசெய்ய அழைத்து வந்தவர்களைப் பரிசோதனை செய்து ஸ்டான்லி மருத்துவமனையில் ஆறாவது தளத்தில் உள்ள அறையில் தங்க வைத்துள்ளனர். இவர்கள் தங்கவைத்துள்ள அறை படுமோசமாகவும், நோய்த் தொற்று பரவும் வகையிலும் உள்ளது.
இதுதொடர்பாக ஸ்டான்லி மருத்துவமனையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சோபியா என்பவர் கூறுகையில், "படுக்கும் கட்டில் கிழிந்தும் அதில் ஏதோ பறவை இறந்த நிலையிலும், மருத்துவக் கழிவுகள் கொட்டியபடி குப்பையாகவும், சுத்தம் செய்யாத நிலையிலும், நோய்த் தொற்று பரவும் வகையிலும் உள்ளது. இதனை உடனடியாக இந்த அரசு மாற்றி அமைத்து எங்களை நோயில் இருந்து பாதுகாக்க வேண்டும்.
இந்த அரசு நோய்த் தொற்று பரவாமல் இருக்க கைகளைக் கழுவ வேண்டும், மாஸ்க் போடவேண்டும், இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும், தன்னைச் சுற்றியுள்ள இடங்களைத் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் எனப் பல பிரபலங்களை வைத்து விளம்பரம் செய்யும் அரசு, தற்போது அதே அரசுகரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட எங்களுக்குக் கொடுத்துள்ள அறை படுமோசமாகஇருப்பதை ஏன் கண்டுக்கொள்ளவில்லை" எனக் கேள்விஎழுப்பியுள்ளார். கரோனா பீதியில் மக்கள் இருக்கும் நிலையில் மேலும் இதுபோன்ற அச்சத்தை உண்டாக்குவது அரசின் அலட்சியத்தைக் காட்டுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)