“All this was brought about by Stalin's great grandfather MGR” - Dindigul Srinivasan

மின் கட்டண உயர்வைக் கண்டித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, திண்டுக்கலில் கல்லறைத் தோட்டத்தில் அதிமுக கழகத்தின் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisment

அப்போது பேசிய திண்டுக்கல் சீனிவாசன், “பல வருடங்களுக்கு முன்னாடியே கலைஞருக்கு அண்ணணாகவும் ஸ்டாலினுக்கு பெரியப்பாவாகவும் இருந்த எம்.ஜி.ஆர் மக்களுக்கான சத்துணவுத் திட்டத்தை கொண்டு வந்தார். ஜெயலலிதா குழந்தையை பெற்று என்னிடம் கொடுங்கள் அதை நான் வளர்கிறேன் என சொன்னார். திமுக, அதிமுக கொண்டு வந்த தாலிக்கு தங்கம், இலவச சைக்கிள், ஸ்கூட்டர் போன்ற திட்டங்களை எல்லாம் நிறுத்திவிட்டு காலை உணவு என்ற புதிய திட்டத்தை தாங்கள் கொண்டு வந்தது போல் நடிக்கின்றனர். ஆனால் அதையெல்லாம் முதல்வரின் அப்பா பெரியப்பா எம்ஜிஆர் கொண்டு வந்தது” எனக் கூறினார்.

Advertisment