
தமிழகத்தில் நான்கு முதல்வர்கள் இருப்பதாகவும், நான்கு முதல்வர்கள் தமிழகத்தை இயக்கி வருவதாகவும் அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி அண்மையில் குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார்.
இந்நிலையில் எடப்பாடி பழனிசாமியின் கருத்திற்கு பதிலளித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ''திமுக ஆட்சியில் நான்கு முதல்வர்கள் இருப்பதாக இபிஎஸ் கூறுகிறார். நல்ல ஆலோசனைகளை வழங்குபவர்கள்எல்லோரும்முதல்வர்கள் தான். அரசுக்கு வழங்கும் அனைத்து நல்ல ஆலோசனைகளையும் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். அனைத்து மக்களின் அரசாக திமுகவின் ஆட்சி உள்ளது. தமிழகத்தை நிரந்தரமாக ஆளப்போவது திமுக தான். அனைவரின் நம்பிக்கையும் திமுக நிறைவேற்றி தரும்'' என எடப்பாடி பழனிசாமிக்கு என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.
Follow Us