இந்தியாவில் கரோனா இரண்டாம் அலையின் பரவல் அதிகமாக உள்ளது. இந்நிலையில், பல மாநிலங்களிலும் முழு ஊரடங்கானது அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, தமிழகத்திலும் கரோனாவின் பாதிப்பு மற்றும் இறப்பு எண்ணிக்கையானது அதிகரித்துள்ள நிலையில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

Advertisment

அதன்படி, இன்று (6.05.2021) முதல் 20ஆம் தேதிவரை அத்தியாவசியக் கடைகள் தவிர அனைத்து கடைகளையும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கானது அமலில் உள்ளதால், புதுப்பேட்டை இருசக்கர வாகன உதிரிபாக மார்க்கெட் மற்றும் ரிச்சி தெரு ரேடியோ மார்க்கெட்டில் உள்ள கடைகள் யாவும் முழுவதுமாக மூடப்பட்டன.