Skip to main content

“தமிழக முதல்வர் கொண்டுவரும் அனைத்து திட்டங்களும் பெண்களுக்கான நலத்திட்டங்களே!” - அமைச்சர் ஐ.பெரியசாமி  

Published on 19/10/2021 | Edited on 19/10/2021

 

"All the schemes brought by the Chief Minister of Tamil Nadu are welfare schemes for women!" - Minister I. Periyasamy

 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் ஒன்றியத்தில் கர்ப்பிணிப் பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா சின்னாளபட்டியில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் விசாகன் தலைமை தாங்கினார். விழாவிற்குச் சிறப்பு விருந்தினராகக் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்துகொண்டு கர்ப்பிணிப் பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.  

 

அப்போது சமுதாய வளைகாப்பில் கலந்துகொண்ட கர்ப்பிணிப் பெண்கள் அனைவருக்கும் தாய்வீட்டில் கர்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு நடத்தும் போது வழங்கப்படும் உணவு வகைகள் அனைத்தையும் கர்ப்பிணிப் பெண்களுக்கு வழங்க கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி உத்தரவிட்டதோடு அதற்கான நிதியும் கொடுத்து இந்நிகழ்ச்சியில் வளைகாப்பு நிகழ்ச்சியில் வழங்கப்படும் உணவு வகைகள் பரிமாறப்பட்டது. மேலும், 200 கர்ப்பிணிப் பெண்களுக்கு எவர்சில்வர் தாம்பூலத்தட்டு, சேலை, பிளாஸ்டிக் கூடை, பழங்கள், திருமாங்கல்ய கயிறு, வளையல், சந்தனம், குங்குமம் ஆகிய பொருட்கள் வழங்கப்பட்டன. 

 

அதன் பிறகு பேசிய ஐ.பெரியசாமி, “கரோனா தொற்று காலத்தில் தைரியமாக 200க்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்கள் இந்த மண்டபத்தில் மகிழ்ச்சியுடன் அமர்ந்திருக்கிறீர்கள் என்றால் அதற்கு ஒரே காரணம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்தான்.  வாழையடி வாழை என்பார்கள் அதுபோல பெண் இனத்திற்காகவும் பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் அயராது பாடுபட்ட ஒப்பற்றத்தலைவர் கலைஞர் வழியில் அவரது வாரிசான மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற பின் போட்ட முதல் கையெழுத்தில் தொடங்கி இன்றுவரை நிறைவேற்றிவரும் அனைத்து திட்டங்களும் பெண்களுக்கான நலத் திட்டங்களே.

 

தமிழக அரசு பொருளாதார நெருக்கடியிலும் பெண்களுக்கு இலவச பேருந்துப் பயணத் திட்டத்தை அறிவித்தது. பெண்கள் முன்னேற்றத்திற்காக அவர் செயல்படுத்திய திட்டமே இது.  இதன் மூலம் நூற்றுக் கணக்கான பெண் கூலித் தொழிலாளிகள், சிறு வியாபாரிகள் பல கிராமங்களுக்குச் சென்று வேலை பார்த்து வருவதோடு வியாபாரமும் செய்துவருகின்றனர். இதன் மூலம் தினசரி அவர்களுக்கு 50 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை மிச்சமாகின்றது. அதன் மூலம் அவர்களின் சிறுசேமிப்பும் உயர்கிறது.  சின்னாளபட்டியில் உள்ள அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தைத் தரம் உயர்த்துவதோடு பொதுமக்களுக்கான அனைத்து நலத்திட்டங்களும் விரைவில் நிறைவேற்றப்படும்” என்று கூறினார். இந்தவிழாவில் கிழக்கு மாவட்ட திமுக துணைச் செயலாளர் தண்டபாணி, ஒன்றிய பெருந்தலைவர் மகேஸ்வரி முருகேசன், ரெட்டியார் சத்திரம் ஒன்றிய முன்னாள் பெருந்தலைவர் கு.சத்தியமூர்த்தி உட்படக் கட்சி பொறுப்பாளர்களும் அதிகாரிகளும் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

“இந்தியா கூட்டணி 350-க்கும் மேற்பட்ட இடங்களை பிடித்து ஆட்சி அமைக்கும்” -அமைச்சர் ஐ.பெரியசாமி!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
India alliance will form a government by capturing more than 350 seats  says I. Periyasamy

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியை பொறுத்தவரை வாக்குப்பதிவு ஓரளவுக்கு நடந்து வருகிறது. காலை ஏழு மணிக்கு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கள்ளிமந்தையத்தில்  தனது வாக்கை பதிவு செய்தார். அதுபோல் சி.பி.எம் வேட்பாளர் சச்சிதானந்தம் ராமலிங்கம்பட்டியில் தனது ஓட்டை பதிவு செய்தார்.

அதைத் தொடர்ந்து தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் அவரது மனைவி சுசிலாவுடன் உடன் திண்டுக்கல் கோவிந்தாபுரம் ஸ்ரீவாசவி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் தனது வாக்கை பதிவு செய்தார்.

India alliance will form a government by capturing more than 350 seats  says I. Periyasamy

அதன் பின் பத்திரிகையாளர்களிடம் அமைச்சர் ஐ.பெரியசாமி பேசும் போது, “இந்தியா கூட்டணி 350க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றி  மத்தியில் ஆட்சி அமைக்கும். வட மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிர்ப்பு அலைகள் அதிகமாக உள்ளது. 150க்கும் குறைவான இடங்களை பாரதிய ஜனதா கட்சி கைப்பற்றும். எப்பொழுதும்  போலவே  குடும்பத்துடன் வந்து ஜனநாயக கடமையை ஆற்ற வந்துள்ளேன்” என்று கூறினார்