Advertisment

மார்ச் 29இல் அனைத்து ரேஷன் கடைகளும் வழக்கம் போல் செயல்படும்!

All ration shops will operate as usual on March 29th

குடும்ப அட்டைதாரர்களின் நலன் கருதி வருகின்ற சனிக்கிழமை (29.03.2025) அன்று அனைத்து நியாய விலைக் கடைகளும் வழக்கம் போல் செயல்படும் என உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

Advertisment

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பொது விநியோகத் திட்டத்தின் கீழ் செயல்படும் அனைத்து நியாய விலைக் கடைகளிலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு எவ்வித பாதிப்புமின்றி, அத்தியாவசியப் பொருட்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. பொதுவாக மாதத்தின் கடைசிப் பணி நாளன்று ஒத்திசைவுப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படுவதில்லை. இம்மாதத்தின் கடைசிப் பணிநாளான 29.03.2025 அன்று சனிக்கிழமையாக அமைகிறது. மேலும், அதனைத் தொடர்ந்து வரும் 30.03.2025 அன்று தெலுங்கு வருடப்பிறப்பு மற்றும் 31.03.2025 அன்று ரம்ஜான் பண்டிகையினை முன்னிட்டு அனைத்து நியாய விலைக் கடைகளுக்கும் விடுமுறை நாட்களாகும்.

Advertisment

எனவே, இம்மாதத்தின் கடைசி இரண்டு நாட்கள் நியாய விலைக் கடைகளுக்குப் பொது விடுமுறை தினங்களாக வருவதால், அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களின் நலன் கருதி வருகின்ற 29.03.2025 (சனிக்கிழமை) அன்று அனைத்து நியாய விலைக் கடைகளும் செயல்பட்டு, வழக்கம் போல் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்யப்படும். எனவே குடும்ப அட்டைதாரர்கள் தங்களுக்கான அத்தியாவசியப் பொருட்களை 29.03.2025 அன்றும் நியாய விலைக் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம்”எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Announcement
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe