Skip to main content

'ஆல் பாஸ்...?' இன்ப அதிர்ச்சி கொடுத்த பள்ளிக்கல்வித்துறை!

Published on 06/06/2022 | Edited on 06/06/2022

 

'All pass...?' Pleasant shocking school education!

 

10, 11, 12 ஆம் வகுப்பு தேர்வுகள் முடிந்து விடைத்தாள் திருத்தும் பணி நடந்துவரும் நிலையில் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. வரும் 13 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட இருக்கிறது. இந்நிலையில் 9 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரையும் 'ஆல் பாஸ்' செய்ய பள்ளி கல்வித்துறை முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

பள்ளிக்கு வந்து தேர்வெழுதிய 9 ஆம் வகுப்பு மாணவர்கள் மட்டும் ஆல் பாஸ் என அறிவிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும், தேர்வெழுத வராத மாணவர்களை அழைத்து மீண்டும் சிறப்பு தேர்வெழுத நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. கரோனா மற்றும் விடைத்தாள் திருத்தும் பணிகளால் தாமதமாக பள்ளிகள் திறக்கப்படுவதால் இந்த முடிவை பள்ளிக்கல்வித்துறை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே கட்டாய கல்வி திட்டத்தின்படி 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை ஆல் பாஸ் என்ற திட்டம் நாடு முழுவதும் அமலில் உள்ள நிலையில் இந்த தகவல்கள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

 


 

சார்ந்த செய்திகள்