கள்ளக்குறிச்சி தி.மு.க சார்பில் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்...

All party meeting  of Kallakurichi DMK ...

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் மசோதாவை திரும்பப்பெற வலியுறுத்தியும் துணைபோன அ.தி.மு.க அரசை கண்டித்தும் வரும் 28.09.2020 (திங்கட்கிழமை) காலை 10.00 மணிக்கு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த 21.09.2020 அன்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் தி.மு.கவின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

அதன்படி இன்று கள்ளக்குறிச்சி வடக்கு மற்றும் தெற்கு மாவட்டங்களி‌ல் அந்தகண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்துவது குறித்து அனைத்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

அனைத்து கட்சியினரும் ஒன்றிணைந்து கள்ளக்குறிச்சி வடக்கு மற்றும் தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட அனைத்து ஒன்றியம், நகரம், பேரூர் வாரியாக கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்துவது என இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட பொறுப்பாளர்மற்றும் கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

kallakurichi
இதையும் படியுங்கள்
Subscribe