/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/IMG-20200718-WA0009.jpg)
கோவையில் பெரியார் சிலை அவமதிப்பை கண்டித்து, சிதம்பரத்தில் அனைத்துகட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிதம்பரத்தில் திராவிடர் கழகம் மற்றும்அனைத்து கட்சிகள் சார்பில், தந்தை பெரியார் சிலை அவமதிப்பை கண்டித்துகண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு திராவிட கழக மாவட்ட செயலாளர் சித்தார்த்தன் தலைமை தாங்கினார். மாவட்ட இணை செயலாளர் யாழ் திலீபன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் மூசா, நகரசெயலாளர் ராஜா, திராவிட முன்னேற்ற கழக மாவட்ட இளைஞரணி செயலாளர் ஜேம்ஸ். விஜயராகவன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் பால.அறவாழி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் திமுக நகர துணை செயலாளர் பன்னீர்செல்வம் முன்னாள் கவுன்சிலர்கள் அப்பு சந்திரசேகரன், வெங்கடேசன், விசிக முன்னாள் கவுன்சிலர் பெரு அரசு, சிபிஐ நகர செயலாளர் அன்சாரி, மாவட்ட குழு உறுப்பினர் முத்து, திக மாவட்ட இணை செயலாளர் சுரேஷ்,நகர அமைப்பாளர் செல்வரத்தினம், குமராட்சி ஒன்றிய செயலாளர் பால்ராஜ், பொறுப்பாளர் செல்வி மகேஷ், நல்லமுத்து, பிள்ளைசாவடி, சக்திவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் தந்தை பெரியார் சிலையை அவமரியாதை செய்தவர்களைக் கண்டித்து முழக்கமிட்டனர்.ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் காவல்துறையினரால்கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)