''அனைத்து கட்சிகளையும் அழைக்க முடியவில்லை... ''-முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு! 

''All parties could not be invited ... '' - Chief Minister Edappadi Palanisamy speech!

ஆக்சிஜன் உற்பத்தி செய்ய ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி தருவது குறித்து, சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று (26/04/2021) காலை 09.15 மணிக்கு அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கு மட்டும் அழைப்பு விடப்பட்டிருந்தது. அதனால், மதிமுக, விசிக, நாதக, மநீம உள்ளிட்ட கட்சிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் சுமார் 02.30 மணி நேரம் ஆலோசனை நடத்தினார் எடப்பாடி பழனிசாமி. அதில், ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட்டைத் திறக்க திமுக, காங்கிரஸ், பாஜக, இடதுசாரிகள் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஒருமித்த ஆதரவைத் தெரிவித்துள்ளனர். மேலும், ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க தற்காலிக அனுமதி வழங்கக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில், ''விரைவில்ஸ்டெர்லைட்வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருவதால் அனைத்துக்கட்சிகளையும் அழைக்க முடியவில்லை'' என தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். கூட்டத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ''தற்பொழுதுஆக்சிஜன் பற்றாக்குறை இருப்பதால் முக்கியமான நிலையில் இருக்கிறோம். சோதனையான நிலையில் இருக்கிறோம். மக்களின் உயிரை காப்பாற்றுவது அரசின் கடமை. அந்த கடைமையுணர்வோடுஇந்த அனைத்துக்கட்சிகூட்டத்தை கூட்டியுள்ளோம். இருந்தாலும் அனைத்துக்கட்சிகளை உள்ளடக்கிய கூட்டத்தை கூட்டவேண்டும்என்றுதான் அரசு எண்ணியது. ஆனால் இன்றையோநாளையோ நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரும் சூழலில் அனைத்து கட்சிகளையும் அழைக்க முடியவில்லை'' என்றார்.

all party meeting Sterlite plant tn govt
இதையும் படியுங்கள்
Subscribe