Skip to main content

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கோரிக்கை முழக்க கண்டன பொதுக்கூட்டம்

Published on 15/12/2022 | Edited on 15/12/2022

 

An all-out struggle rally at Annamalai University

 

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள், ஊழியர்கள், ஓய்வூதியர்கள் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை முழக்க கண்டன பொதுக்கூட்டம்  நடைபெற்றது.  இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டமைப்பின் தலைவர் சிவகுருநாதன் தலைமை தாங்கினார். இதில் இணை ஒருங்கிணைப்பாளர்கள் மனோகரன், ரவி, ஏ.ஜி. மனோகரன் இளங்கோ, செல்லபாலு உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக ஊழியர்கள். ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர்.

 

இந்தக் கூட்டத்தில் 12 ஆண்டுகளுக்கு மேலாகத் தொகுப்பு மற்றும் தினக்கூலி ஊழியர்களாக பணியாற்றும் 300-க்கும் மேற்பட்டவர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். கடந்த 10 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பதவி உயர்வுகளை ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு வழங்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கு அனைத்து பணப் பயன்களையும் உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.

 

இந்த 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்திக் கடந்த நவம்பர் மாதம் முதல் பல்கலைக்கழக வளாகத்தில் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு வகையான போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. சரியான நடவடிக்கை இல்லை என்றால் தொடர்ந்து அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போராட்டம் பல்வேறு வடிவங்களில் நடைபெறும் எனவும் கூட்டமைப்பு சார்பில் அறிவித்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பாலியல் சமத்துவ பயிற்சி பட்டறை

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
Gender Equality Workshop at Annamalai University

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம் இணைந்து பாலியல் சமத்துவத்தைப் பற்றிய 3 நாட்கள் பயிற்சி பட்டறை பல்கலைக்கழக மக்களியல் துறையில் நடைபெற்றது. மக்களியல் துறை உதவிப் பேராசிரியர் க. மகேஸ்வரி அனைவரையும் வரவேற்றார். கலைப்புல தலைவர் விஜயராணி தலைமை தாங்கிப் பேசினார். துறைத் தலைவர் ரவிசங்கர் பயிற்சி பட்டறை பற்றிய தொகுப்பு உரையாற்றினார்.

சிறப்பு விருந்தினராக அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆளவை மன்ற உறுப்பினர் பேராசிரியர் அரங்க பாரி, ராஜீவ்காந்தி தேசிய மேம்பாட்டு நிறுவனத்தின் பேராசிரியர் வசந்தி ராஜேந்திரன், சிதம்பரம் வட்டாட்சியர் ஹேமா ஆனந்தி ஆகியோர் கலந்து கொண்டு மாணவ - மாணவிகளுக்குப் பாலியல் சமத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். இதில் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவ - மாணவியர்கள் மற்றும் அதன் உறுப்பு கல்லூரி மாணவ - மாணவியர்கள் 100 பேர் கலந்து கொண்டனர். மக்களியல் துறை இணைப் பேராசிரியர் பீமலதா தேவி நன்றியுரை வழங்கினார்.

Next Story

‘தி ரைஸ் எழுமின்’ அமைப்பு நடத்தும் மாநாட்டிற்கான பொது அழைப்பு (படங்கள்)

Published on 06/03/2024 | Edited on 06/03/2024

 

‘தி ரைஸ் எழுமின்’ அமைப்பு நடத்தும் 13-வது உலகத் தமிழ் தொழிலதிபர்கள் மற்றும் திறனாளர்கள் மாநாடு வரும் ஜூன் மாதம் 7,8,9 நாட்களில் சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் நடைபெறுகிறது. ‘தி ரைஸ் எழுமின்’ அமைப்பு நடத்தும் ‘தி ரைஸ் டாவோஸ்’ மாநாட்டில் பங்கேற்றுப் பயன்பெற விரும்புவோர் www.tamilrise.org என்ற இணைய தளம் வழியாகவோ, +91 9150060032, +91 9150060035 எண்களுக்குத் தொடர்பு கொண்டோ பதிவு செய்யலாம். இம்மாதம் 31-ம் தேதிக்குள் பதிவு செய்பவர்களுக்கு 30% பதிவுக் கட்டணச் சலுகை தரப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது. டாவோஸ் மாநாட்டிற்கான பொது அழைப்பு இன்று (06-03-24) வெளியிடப்பட்டது. இச்சந்திப்பில் 'தி ரைஸ்' அமைப்பின் நிறுவனர் தமிழ்ப் பணி ம. ஜெகத் கஸ்பர், அனைத்துலகத் தமிழ்ப் பொறியாளர் பேரவைத் தலைவர் திரு. கிருஷ்ணா ஜெகன், உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.