சென்னையில் சிந்தாதிரிப்பேட்டை காயிதே மில்லத் கல்லூரி பின்புறம் அகில இந்திய விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழு மற்றும் விவசாயிகள் போராட்ட ஆதரவு அமைப்புகள் இணைந்து அகில இந்திய உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
இதில் கலந்துகொண்ட அவ்வமைப்பின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், ‘டெல்லி விவசாயிகள் போராட்டத்தை சீர்குலைக்கும் போக்கை கைவிடு’, ‘விவசாயிகள் விரோத போக்கை கைவிடு’, ‘விவசாயிகள் மீதான அடக்குமுறையை கைவிடு’ என்று மத்திய அரசு, தமிழக அரசு மற்றும் காவல் துறையினரைக் கண்டித்தும் கோசங்களை எழுப்பி கண்டனங்களை தெரிவித்தனர்.