Advertisment

கரூரில் நடந்த அகில இந்திய கூடைப்பந்து போட்டி; சென்னை இந்தியன் வங்கி சாம்பியன்

All India Basketball Tournament at Sagarur; Chennai Indian Bank Champion

கரூரில் நடைபெற்ற அகில இந்திய அளவிலான கூடைப்பந்து இறுதிப் போட்டியில் ஆண்கள் பிரிவில் சென்னை இந்தியன் வங்கி அணியும் பெண்கள் பிரிவில் ஈஸ்ட் அண்ட் ரயில்வே கொல்கத்தா அணியும் சேம்பியன் பட்டத்தை வென்றது.

Advertisment

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருவள்ளுவர் மைதானத்தில் 63 ஆம் ஆண்டு ஆண்களுக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டியும் ஒன்பதாவது ஆண்டு பெண்களுக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டியும் கடந்த 22 ஆம் தேதி துவங்கி ஆறு நாட்கள் நடைபெற்றது. இதில் இந்தியன் கடற்படை அணி, லோனா வில்லா திருவனந்தபுரம், கேரளா மின்சார வாரிய அணி, புதுடெல்லி இந்தியன் ரயில்வே அணி, பஞ்சாப் போலீஸ் அணி, புதுடெல்லி இந்திய விமானப்படை அணி உள்ளிட்ட தலைசிறந்த எட்டு அணிகளும் பெண்கள் பிரிவில் ஐந்து அணிகளும் கலந்து கொண்டனர்.

Advertisment

ஆண்களுக்கான இந்தப் போட்டி லீக் மற்றும் நாக் அவுட் முறையில் நடைபெற்றது. பெண்களுக்கான போட்டி லீக் முறையில் நடைபெற்றது. இறுதிப் போட்டியில் டெல்லி ஏர் போர்ஸ் அணி சென்னை இந்தியன் வங்கி அணி மோதியதில் 52க்கு 56 என்ற புள்ளி கணக்கில் சென்னை இந்தியன் வங்கி அணி சேம்பியன் பட்டத்தை வென்றது. வெற்றி பெற்ற வீரர்களுக்கு முதல் பரிசு ஒரு லட்ச ரூபாயும் சுழல் கோப்பையும் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.பெண்களுக்கான இறுதிப் போட்டியில் கொல்கத்தா ஈஸ்டர்ன் ரயில்வே அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. அவர்களுக்கு 50 ஆயிரம் ரொக்கப் பணமும் சூழல் கோப்பை வழங்கப்பட்டது. முன்னதாக இரு அணி வீரர்களுக்கும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வாழ்த்து தெரிவித்தார்.

senthilbalaji karur
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe