All firefighters battle cylinder leak in school premises

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே கைலாசபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 70க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

பள்ளி வளாகத்தில் உள்ள சமையல் கூடத்தில் பணியாளர் கனக வள்ளி என்பவர் இன்று காலையில் உணவு தயாரிக்கும் பணியில் வழக்கம்போல ஈடுபட்டிருந்தார்.‌ அப்போது அங்கிருந்த ஒரு சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு திடீரென தீ பற்றி எரிந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர் கனகவள்ளி அங்கிருந்து வெளியேறி விளாத்திகுளம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார். இதனிடையே ஒரு சிலிண்டரில் பிடித்த தீ அருகில் இருந்த மற்றொரு சிலிண்டர் மற்றும் அங்கு வைக்கப்பட்டிருந்த உணவுப் பொருட்கள் மீது பரவி தீ பற்றி எரிந்தது. விளாத்திகுளம் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து கெமிக்கல் நுரையை பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தினர். இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது. இது குறித்து மாசர்பட்டி காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment

All firefighters battle cylinder leak in school premises

சிலிண்டரில் ஏற்பட்ட லீக்கேஜ் காரணமாக தீப்பிடித்து எரிந்த நிலையில் சமையல் பணியாளர் துரிதமாக செயல்பட்டு தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்ததால் பெரும் தீ விபத்து மற்றும் சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் எட்டயபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செய்தியாளர் - எஸ்.மூர்த்தி