publive-image

தி.மு.க.வின் அச்சுறுத்தல்களை நீதிமன்றத்தில் சந்திப்பேன் என்று பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Advertisment

இது குறித்து அண்ணாமலை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "100 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு தி.மு.க. கட்சி, என் மீது, மானநஷ்ட வழக்கு நோட்டீஸ் அனுப்பி இருப்பதை அறிந்தேன். தி.மு.க.வின் முதன்மை குடும்பம், சாதாரண சாமானியனான என்னையும், அவர்களைப் போன்ற துபாய் குடும்பத்துக்கு, சரிசமமாக நடத்துகிறது.

Advertisment

நம் நாட்டின் நீதித்துறை மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. தி.மு.க.வின் அச்சுறுத்தல்களை எல்லாம் நீதிமன்றத்தில் சந்திப்பேன். தமிழகத்துக்கான, என் போராட்டம் தொடரும்... துணிவுடன். மக்கள் துணையுடன்..." என்று குறிப்பிட்டுள்ளார்.