
சிவகங்கை மாவட்டம் கச்சநத்தம் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 27 பேரும் குற்றவாளிகள் என நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
2018, மே 28-ஆம் தேதி சிவகங்கை மாவட்டம்-கச்சநத்தம் கிராமத்தில் நடந்த ஜாதி மோதலில், பட்டியலினத்தைச் சேர்ந்த மூவர் கொல்லப்பட்டனர். ஐவர் படுகாயம் அடைந்தனர்.இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.இந்த படுகொலை வழக்கு தொடர்பாக மொத்தம் 33 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், அதில் இரண்டு பேர் இறந்து விட்டதாகவும் மூன்று பேர் சிறார்கள் என்பதாலும் மீதமுள்ள 27 பேர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பாக விசாரணைநடைபெற்று வந்த நிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்ட 27 பேரும் குற்றவாளிகள் என அறிவித்த நீதிமன்றம் இதற்கான தண்டனை விபரம் வரும் புதன்கிழமை அறிவிக்கப்படும் என அறிவித்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)