Aligned cone at a cost of Rs 1.20 lakh

சிதம்பரம் நகரம் மேலவீதியில் கடந்த பல ஆண்டுகளாகக் காலை மற்றும் மாலை நேரங்களில் சங்கு (சைரன்) ஒலிக்கும். இந்த சத்தத்தைக் கேட்டு பொதுமக்கள் அவர்களின் அன்றாட வேலை நேரங்களை ஒதுக்கிக்கொள்வார்கள். இது சிதம்பரம் மற்றும் சுற்று வட்ட பகுதியில் வயல்களில் வேலை செய்யும் அனைத்து தரப்பு மக்களுக்கும் ஏற்றவகையில் பயனுள்ளதாகச் செயல்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாததால் பழுதாகி சங்கு செயல்படாமல் இருந்தது.

Advertisment

இந்தநிலையில் தற்போது திமுக தலைமையிலான நகர் மன்ற தலைவர் செந்தில்குமார் பொறுப்பேற்ற பிறகு முதல் நகர் மன்ற கூட்டத்தில் மேலவீதியில் உள்ள சங்கை சரிசெய்ய வேண்டும் என்று காங்., கட்சியின் நகர் மன்ற உறுப்பினர் மக்கீன் கோரிக்கை விடுத்தார். அதனை ஏற்று சங்கை உடனடியாக சரிசெய்ய நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.

Advertisment

இதனை தொடர்ந்து ரூ 1.20 லட்சம் செலவில் சங்கு சரிசெய்யப்பட்டது. இதனைப் பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி இன்று (வெள்ளிக்கிழமை) மேலவீதியில் நடைபெற்றது. இதில் சிதம்பரம் நகர் மன்ற தலைவர் செந்தில்குமார் கலந்து கொண்டு துவக்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் நகர் மன்ற துணைத்தலைவர் முத்துகுமரன், நகராட்சி ஆணையர் அஜிதாபர்வீனா, மூத்த நகர் மன்ற உறுப்பினர்கள் ரமேஷ், அப்பு சந்திரசேகர், மணி, காங்., கட்சியின் உறுப்பினர் மக்கீன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர் மன்ற உறுப்பினர் தஸ்லிமா உள்ளிட்ட நகர் மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.