Alert issued for 13 districts

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Advertisment

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிவுறுத்தல் படி தமிழகத்தின் நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய நான்கு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தென்காசி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பான இடங்களில் மக்கள் தங்க வைக்கப்படுவதுடன், அவர்களுடைய அரசு ஆவணங்கள் மற்றும் முக்கிய ஆவணங்களை பத்திரமாக வைத்துக் கொள்ளவும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

Advertisment

இன்று (11ம் தேதி) தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேநேரம் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை இயல்பை விட அதிகமாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழை எச்சரிக்கை காரணமாக கன்னியாகுமரியில் மீனவர்கள் இன்று கடலுக்கு செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வட தமிழகத்தில் புதுவை, காரைக்கால் வரை மிதமான மழை பெய்யக்கூடும். இன்றும் நாளையும் தென் தமிழகம் முழுவதும் மேகக் கூட்டங்கள் நிறைந்து காணப்படும். எனவே பரவலாக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

தமிழகத்தில் இன்று காலை 10 மணி வரை 13 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர், மயிலாடுதுறை, விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.