சபரிக்கு கொடுக்கப்பட்ட அலர்ட் - நெல்லை, தூத்துக்குடி மீனவர்களுக்கு எச்சரிக்கை

 Alert given to Sabari - Nellai, Thoothukudi fishermen warned

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 15ஆம் தேதி (15.10.2024) தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இத்தகைய சூழலில் தமிழகத்தின் தென் மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

தொடர்ந்து டெல்டா மாவட்டங்களில் நாளை அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் நாளை மறுநாள் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சபரிமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளை கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த பகுதிகளுக்கு மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் 7 சென்டிமீட்டர் முதல் 11 சென்டிமீட்டர் வரை சபரிமலை பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது ஐயப்ப சீசன் தொடங்கியுள்ள நிலையில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இதற்கான ஏற்பாடுகளை தொடர்ந்து கேரள அரசு செய்து வரும் நிலையில் தற்போது சபரிமலை பகுதிக்கும் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தகுந்தது.

அதேபோல் தமிழகத்தில் நெல்லை மாவட்டமீனவர்கள்,தூத்துக்குடி மாவட்டம் மீனவர்கள் வரும் 29ஆம் தேதி வரை கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடலில் 75 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வானிலை மையத்தின் எச்சரிக்கையை அடுத்து இது தொடர்பான அறிவிப்பை மீன்வளத்துறை உதவி இயக்குநர் வெளியிட்டுள்ளார்.

saparimalai Thoothukudi weather
இதையும் படியுங்கள்
Subscribe