Alert for 4 districts

தமிழகத்தில் இன்று காலை 10 மணி வரை 4மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமானது முதல் லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வெளியான அறிவிப்பின்படிவிழுப்புரம், நெல்லை, தென்காசி, கோவை ஆகிய நான்கு மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர் மழைப்பொழிவு காரணமாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 83.08 அடி ஆகவும், நீர் இருப்பு 17.3 டிஎம்சி ஆகவும், நீர்வரத்து 2,456 கன அடி ஆகவும், நீர் வெளியேற்றம் 855 கன அடி ஆகவும் உள்ளது. வரும் ஜூன் 11 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுவையில் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.