covai

Advertisment

கோவையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபரை நிறுத்தி சோதனையிட்டனர். சோதனையில் அந்த வாலிபர் மது அருந்தியது தெரிய வந்தது, இதனை கேட்டபோது அந்த வாலிபர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதையடுத்து அந்த வாலிபரை போலீசார் கோவை ஜெ.எம். 2 நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றனர். இதனை விசாரித்த நீதிபதி, சம்மந்தப்பட்ட இளைஞர் பத்து நாட்கள் போக்குவரத்து காவல்துறையினருடன் இணைந்து போக்குவரத்தை சீர்படுத்தும் பணியில் ஈடுபட வேண்டும் என்று தண்டனை விதித்தது.

Advertisment

இதையடுத்து இன்று கோவை ஆம்னி பேருந்து நிலையம் முன்பு, இளைஞர் சுதர்சன் நீதிமன்ற உத்தரவுபடி காவல்துறையினருடன் இணைந்து போக்குவரத்தை சீர்படுத்தும் பணியில் ஈடுபட்டார்.