alcoholic son; Desperate mother take bad decision

Advertisment

மதுவிற்கு அடிமையான மகனால் தாய் விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஈரோட்டில் நிகழ்ந்துள்ளது.

ஈரோடு, ஈ.பி.பி. நகர், ஜனதா காலனியை சேர்ந்தவர் காவேரி (60). இவர் தனது கணவர் தேவராஜன் (67) மற்றும் மகன் துரைராஜ், மருமகன் தீபா, பேரன் ஆகியோருடன் வசித்து வந்தார். மகன் துரைராஜ் டிரைவராக வேலை பார்த்து வந்தார். அவர் மதுவுக்கு அடிமையாகி, வருமானம் முழுவதையும் மது குடிக்கச் செலவு செய்து வந்தார்.இதனால், தாய் காவேரி கடும் மன வேதனையில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், மகனின் மதுபழக்கத்தால் மனவிரக்தியில் இருந்த தாய் காவேரி, நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், அங்கிருந்த கொய்யா மரத்தில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது, அங்கு வந்த தேவராஜின் தங்கை ராஜாமணி, காவேரி தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.உடனடியாக அவர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் காவேரியை மீட்டு ஈரோடு அரசுத் தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே காவேரி இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து, ஈரோடு வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.