Alcoholic rage; The boy who old man incident

காஞ்சிபுரத்தில் 60 வயது முதியவரை 17 வயது சிறுவன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

காஞ்சிபுரம் மாநகராட்சி, பெரிய காஞ்சிபுரம் செங்கழுநீர் ஓடை வீதி பகுதியில் யாசகம் கேட்டு வாழ்ந்து வந்துள்ளார் 60 வயது முதியவர் ஒருவர். அந்த முதியவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் நட்பாக பழகி வந்துள்ளான். இருவரும் அந்த பகுதியில் உள்ள கடை வாசல்களில் இரவு நேரங்களில் ஒன்றாகஅமர்ந்து மது அருந்துவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தனர்.

இந்த நிலையில், திடீரென நேற்று காலை அந்த முதியவர் ஒரு கடையின் வாசலில் உயிரிழந்த நிலையில் கிடந்தார். உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதில் முதியவரின் உடலைக் கைப்பற்றிய போலீசார் அவரது உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தில் முதியவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என அவருடன் பழகி வந்த அந்த 17 வயது சிறுவனை பிடித்து போலீசார் விசாரித்துள்ளனர். விசாரணையில் மது அருந்தும் பொழுது தனக்கு தராமல் முதியவர் மட்டும் அருந்தியதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அவரை கொலை செய்ததை சிறுவன் ஒப்புக்கொண்டான்.

Advertisment

மது தராததால் ஆத்திரத்தில் முதியவர் ஒருவர், சிறுவனால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரிய காஞ்சிபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.