An alcoholic husband; Full month pregnant take wrong  decision

ராணிப்பேட்டையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான கணவனால் நிறைமாத கர்ப்பிணி பெண்தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த பாகவெளி கிராமம் குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் விக்னேஷ் (28) இவரது மனைவி சுஜிதா (24). தம்பதியருக்கு 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. தம்பதியருக்கு நான்கு வயதில் சஞ்சனா மற்றும் ஒரு வயதில் ஜோஷிகா என 2 பெண் குழந்தைகள் உள்ளனர் சுஜிதா தற்போது 3- வது முறையாக கர்ப்பமாக உள்ளார்.

இதற்கிடையே விக்னேஷ் சரிவர வேலைக்கு செல்லாமல், குடும்ப செலவுக்கு பணம் தராமல் சுற்றி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் தம்பதியருக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு இன்று காலையும் வீட்டில் தம்பதியருக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் 9 மாத கர்ப்பிணியாக உள்ள சுஜிதா மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி விரக்தியடைந்துள்ளார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். இத்தகவல் அறிந்து வந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வாலாஜாபேட்டை போலீசார் உயிரிழந்த சுஜிதாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் . திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிய நிலையில் நிறைமாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் குறித்து ராணிப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் ராஜராஜன் விசாரணை நடத்தி வருகிறார்.