Advertisment

மது போதையில் போலீசார் மீது தாக்குதல்; வைரலாகும் வீடியோ

Alcoholic attack on police; video goes viral

அதீத மதுபோதையில் இளைஞர் ஒருவர் போலீசாரை தாக்கும் வீடியோ காட்சிகள் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

சென்னை தாம்பரம் அடுத்துள்ள மாடம்பாக்கம் பிரதான சாலை பகுதியில் அமைந்துள்ளது நூற்றாஞ்சேரி. இந்த பகுதியில் உள்ள ஜோதி நகர் என்ற இடத்தில் நேற்று இரவு மதுபோதையில் உணவகத்திற்கு சென்ற இளைஞர் ஒருவர் உணவகத்திலேயே மது அருந்தியதாககூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து உணவகத்தில் ஆம்லெட் கேட்டுள்ளார். உணவக ஊழியர்கள் ஆம்லெட் தராததால் ஆத்திரமடைந்த போதை நபர் மாடம்பாக்கம் பிரதான சாலையில் உருண்டு புரண்டு அட்ராசிட்டி செய்தார்.

Advertisment

இளைஞர் ஒருவர் மது போதையில் நடு சாலையில் அமர்ந்திருப்பது குறித்து தகவலறிந்து அங்கு வந்து சேலையூர் காவல் நிலைய இரவு நேர காவலர் கந்தன் அவரை அப்புறப்படுத்த முயன்றபோது காவலரை காலால் தாக்கி போதை இளைஞர் அட்டகாசம் செய்யும் வீடியோ காட்சிகள் தற்பொழுது இணையத்தில்வைரலாகி வருகிறது.

TASMAC police
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe